மிகப் பெரிய அளவில் வட கொரியா மீது அமெரிக்கா தடை விதிப்பு

இதுவரை எந்த நாட்டுக்கும் வழங்கப்படாத அளவுக்கு வட கொரியா மீது மிக பெரிய அளவிலான புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய அளவில் வட கொரியா மீது அமெரிக்கா தடை விதிப்பு

பட மூலாதாரம், Reuters

இந்த புதிய தடை நடவடிக்கை 56 கப்பல்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவேதான் நடத்தி வருகின்ற அணு ஆயுத திட்டம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் சர்வதேச மற்றும் அமெரிக்காவின் தடைகள் பலவற்றை வட கொரியா எதிர்கொண்டு வருகிறது.

இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ள கப்பல்களும், நிறுவனங்களும் எங்குள்ளன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

North Korean photo of what the country's news agency says is a long-range missile, 30 November 2017

பட மூலாதாரம், Reuters

"வட கொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு நிதி மற்றும் எரிபொருள் வழங்கவும், அதன் ராணுவத்தை நிலைநாட்டவும் உதவும் வகையில் செயல்படும் 56 கப்பல்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இலக்கு வைத்து விரைவில் இவற்றுக்கான வருவாய் மற்றும் எரிபொருள் ஆதாரங்களை துண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை கருவூலத் துறை விரைவில் துவங்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 -ஆம் ஆண்டில் இருந்து வட கொரிய ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை உருவாக்கி வருகிறது.

அமெரிக்கா அறிவித்துள்ள அண்மைய கட்டுப்பாடுகள் நவம்பரில் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்கு அடுத்தடியாக விதிக்கப்பட்ட தடையாக அமையும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :