ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறேன்

பட மூலாதாரம், Getty Images
தாம் தவறாக அர்த்தப்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவர் ஆஃப்ரிக்க நாடுகள் குறித்து விவரிக்கும் போது `மலவாய்` என்ற பதத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி பேசிய அவர் நான் முழுவதுமாக தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

தாக்குதல்

பட மூலாதாரம், Reuters
வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை தாங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு விமான ஓட்டியை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் இரண்டு போலீஸாரும் பல பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்கர் பெரஸ் என்னும் விமான ஓட்டி, காணாமல் போன ஒரு ஹெலிகாப்டரை பயன்படுத்தி அரசு கட்டடங்கள் மீது குண்டு வீசினார். இவரை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது போலீஸாருக்கும், பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட சண்டையின் போது இரண்டு போலீஸார் உட்பட பல தீவிரவாதிகள் இறந்துள்ளனர். ஆஸ்கருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

ஏழு மாதம்... இரண்டு பிரதமர்கள்

பட மூலாதாரம், EPA
ஏழு மாதங்களில் ரொமானியா நாட்டில் இரண்டு பிரதமர்கள் மாறியுள்ளனர். மிஹாய் டுடோஸ் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் அவரது சொந்தக் கட்சியான சோஷியல் டெமாகிரேட் கட்சியே அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதை அடுத்து, அவர் தன் பதவியை இழந்துள்ளார்,

ஆயிரம் இளைஞர்கள்

பட மூலாதாரம், Getty Images
டென்மார்க்கில் `செக்ஸ்` வீடியோவை பகிர்ந்ததாக 1000 இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பதினைந்து வயதுடைய இளைஞர்கள் உடலுறவு கொள்ளும் காட்சிகளை கொண்ட வீடியோவை, ஃபேஸ்புக் மெசஞ்சரைக் கொண்டு இந்த இளைஞர்கள் பகிர்ந்துள்ளனர் என்பது போலீஸின் குற்றச்சாட்டு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












