''நான் இனவெறியாளன் அல்ல'' : அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம், AFP/Getty
ஆஃப்ரிக்க நாட்டவர்களை மலத்துளை நாடுகள் என டிரம்ப் மோசமாக திட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து டிரம்ப் மீது இனவெறியாளர் என வரிசையாக குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில் டொனால்டு டிரம்ப் அதனை மறுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் குடியேறிய அயல்நாட்டவர்களை மோசமான வசைச்சொல் பயன்படுத்தி திட்டியதாக செய்திகள் வெளியானது.
இதையடுத்து நிருபர்களிடம் தற்போது பேசிய டிரம்ப் '' நான் இனவெறியாளன் இல்லை, இதுவரை நீங்கள் பேட்டி எடுத்ததிலேயே மிகக்குறைந்த இனவெறியாளர்'' என கூறியுள்ளார்.
இனவெறி குற்றச்சாட்டுக்களுக்கு அதிபர் டிரம்ப் நேரடியாக பதிலளிப்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஞாயிறு இரவு அன்று டிரம்ப் சர்வதேச கோல்ஃ ப் கிளப்பில் நிருபர்களிடம் பேசுகையில் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய ஒரு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி டிரம்பின் கருத்துக்கள் இனவெறியை காட்டுகின்றன என்றும் அந்த சொற்கள் மனிதத் தன்மையின் மோசமான பக்கத்தை திறந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் குடியேற்றம் குறித்த சந்திப்பில் ''நான் இந்த மொழியை உபயோகிக்கவில்லை'' என ட்வீட் செய்துள்ளார் டிரம்ப். தான் பயன்படுத்திய சொற்கள் கடுமையானவை என்றும் ஆனால் இப்படிச் சொல்லவில்லை என்றும் அவர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
டிரம்ப் பேச்சு குறித்த செய்திக்கான எதிர்வினை என்ன ?
அமெரிக்க தூதரிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது போட்ஸ்வானா. மேலும் இது மிகவும் பொறுப்பற்ற செயல் என்றும், அவரது கருத்துக்கள் இனவெறியானது மற்றும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.
டிரம்பின் கருத்து வெளிப்படையாக எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது என ஆஃப்ரிக்க ஒன்றியம் கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமை ஆணைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், '' டிரம்ப் பற்றிய இந்த செய்தி உறுதியானதாக இருப்பின் இது அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாகவும், அமெரிக்க அதிபரிடம் இருந்து அவமானப்படத்தக்க கருத்து வெளியாகியிருக்கிறது. என்னை மன்னியுங்கள் ஆனால் இதனை இனவெறி என குறிப்பிடுவதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை'' என்றார்.
பிற செய்திகள்:
- காஷ்மீர்: பெல்லட் குண்டுகளால் பார்வை இழந்த மாணவி பள்ளித் தேர்வில் சாதனை
- அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப்
- 'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட் வாழ்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்!
- இஸ்ரோ: வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் - 6 முக்கிய தகவல்கள்
- ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












