2017-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளை விளக்கும் ஆச்சரிய எண்கள்

பட மூலாதாரம், Getty Images
2017ம் ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நிகழ்ந்த பல்வேறு விடயங்களை பலரும் அறியாத ஆச்சரியமளிக்கும் எண்களின் மூலம் விளக்கும் படங்களின் தொகுப்பு.

37,993
இது ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி இராக் மற்றும் சிரியா மீது வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வீசிய எண்ணிக்கை. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அறிவித்துள்ளதைவிட அதிகமான பொதுமக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

127
இது உலகில் அதிக எரிமலைகளுள்ள நாடான இந்தோனேசியாவில் இருக்கும் எரிமலைகளின் எண்ணிக்கையாகும். நவம்பர் மாதத்தில், மவுண்ட் அகுங் என்ற எரிமலை வெடித்து தீப்பிழம்புகளை வெளியேற்ற ஆரம்பித்ததால் அப்பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1.7 மில்லியன் மக்கள்
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் சம்பந்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை கண்டனம் செய்வதற்காக #metoo என்ற ஹாஷ்டேகை 85 நாடுகளை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

பூஜ்யம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், மியான்மரின் நடைமுறை தலைவருமான ஆங் சாங் சூச்சி அந்நாட்டில் ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைக்கு ஒருமுறை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.

812 கால்பந்து மைதானங்களுக்கு சமம்
அண்டார்டிகாவில் கடந்த ஜூலை மாதம் உடைந்து விழுந்த ஏ68 என்றழைக்கப்படும் பனிப்பாறையானது அடுத்து நடக்கவுள்ள 12 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ஒரே நேரத்தில் நடத்துவதற்குரிய அளவுக்கு பெரியதாகும்.

ஒரு நாளைக்கு 44 சிகரெட்டுகள்
மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றான புதுடெல்லியில் வாழும் மக்கள் அங்குள்ள காற்றை ஒரு நாளைக்கு சுவாசிப்பதென்பது 44 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

1600%
கடந்த 2016ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிட்காயின்களின் மதிப்பு 1600 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












