ஒருபாலின திருமண சட்டம் அமலான அன்றே மணம் முடித்த ஜெர்மானியர்கள்

பட மூலாதாரம், EPA
ஜெர்மன் நாட்டில், ஒருபால் திருமணம் சட்டம் சட்டப்படி அமலுக்கு வந்த அன்றைய தினமே இரு ஆண்கள் திருமணம் முடித்து முதல் ஒருபால் தம்பதிகள் ஆகியுள்ளனர்.
பெர்லினில் உள்ள ஷ்கோனபெர்க்கில் உள்ள நகர அரங்கத்தில், 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கார்ல் கிரீய்ல் மற்றும் போடோ மெண்ட் தம்பதி, உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர்.
இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), சட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே தம்பதிகள் திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக, எப்போதும் இல்லாத வகையில், ஜெர்மனியின் பல நகரங்களில் உள்ள பதிவாளர் அலுவலகங்கள் திறந்து இருந்தன.
பிற தம்பதிகள் போலவே, திருமணத்திற்கு பிறகு ஒருபால் தம்பதிகளுக்கு ஒரே மாதிரியான வரி சலுகைகளும், தத்தேடுப்பு உரிமைகளும் கிடைக்கின்றது.

பட மூலாதாரம், Reuters
2001 ஆம் ஆண்டு முதல், ஒருபால் இணையர்கள் தங்களை பதிவு செய்துகொண்டு ஒன்றாக வாழும் நடைமுறை ஜெர்மனியில் இருந்து வந்தது. ஆனால், சராசரி திருமணங்களை முடித்தால் தம்பதிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஒரு பாலுறவு திருமணங்களில் கிடைக்கவில்லை.
பல காலங்களாக இந்த விவகாரம் குறித்த வாக்கெடுப்பிற்கு ஜெர்மன் சான்சிலர் ஏங்கலா மெர்கல் எதிர்பாராத விதமாக தனது எதிர்ப்பை விலக்கிக்கொண்ட பிறகு, கடந்த ஜூன் மாதம், சமத்துவ திருமண முறையை அறிமுகப்படுத்துவற்கு ஆதரவாக ஜெர்மன் நாடாளுமன்றம் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












