கீழடி அகழ்வில் தமிழக அரசும் இணைந்து செயல்பட உரிமம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கீழடி

பட மூலாதாரம், M K STALIN

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு பிறப்பித்திருந்த இந்த உத்தரவில், தமிழக அரசுக்கு இரண்டு வார காலத்திற்குள் உரிமம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி தொடுத்திருந்த இந்த வழக்கில், கீழடியில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கக் கோரியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அதேப்போல கீழடியில் நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியை காலதாமதம் செய்யக்கூடாது எனவும், கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிரிஷானாவை மீண்டும் இங்கேயே பணியமர்த்த வேண்டும் என்றும் கனிமொழிமதி தொடர்ந்து கோரி வருகிறார்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் சூழலில்தான், நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என அந்த அமர்வு கூறியுள்ளது.

கீழடி அகழாய்வுகளைத் தொடர கோரிக்கை

காணொளிக் குறிப்பு, கீழடி அகழாய்வுகளைத் தொடர கோரிக்கை

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :