போதைப் பொருள் வர்த்தகத்தில் தொடர்பு : பிலிப்பைன்ஸ் அதிபர் மகன் மறுப்பு

ரொட்ரிகோ டுடெர்டே

பட மூலாதாரம், EPA

மில்லியன் டாலர் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேவின் மகன்களின் ஒருவரான பாலோ டுடெர்டே மறுத்துள்ளார்.

செனட் சபை நடத்திய விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாலோ கூறினார். இருந்தாலும், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

சீனாவில் இருந்து மணிலாவுக்கு கப்பல் மூலம் போதை பொருட்கள் கடத்தப்பட்டதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனக் கூறுவதற்காக அதிபர் மருமகனும் இந்த விசாரணையில் ஆஜரானார்.

போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை அதிபர் டுடெர்டே கடந்த வருடம் தொடங்கினார். தனது குடும்பத்தினர் யாருக்காவது போதை பொருள் வர்த்தகத்தில் தொடர்பிருந்தால், பதவி விலகுவேன் என டுடெர்டே வாக்குறுதி அளித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :