உங்களால் உயிர் பிழைக்க முடியுமா?! புதிர் - 10
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்த்துக்கள்!

பட மூலாதாரம், Getty Images
மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் பத்தாம் பகுதி இது.
புதிர் - 10
நீங்கள் ஒரு சிறைக்கைதி, உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய விளையாட்டை விளையாடுவதன் மூலம் உயிர் பிழைத்துக் கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
50 வெள்ளை கோலிகுண்டுகள், 50 கருப்பு கோலிகுண்டுகள், மேலும் இரண்டு காலி கிண்ணங்கள் உங்களிடம் கொடுக்கப்படுகின்றன.
இரண்டு காலி கிண்ணங்களில் இந்த கோலிக் குண்டுகளை பிரித்து போட வேண்டும். அனைத்து கோலிகுண்டுகளையும் பயன்படுத்தி நீங்கள் அதை எவ்வாறு வேண்டுமென்றாலும் பிரித்துக் கொள்ளலாம்.
உங்கள் கண்களை கட்டி, அந்த கிண்ணங்கள் வேறு இடத்திற்கு மாற்றிவிடப்படும். பிறகு ஒரு கிண்ண த்தை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு கோலிகுண்டை எடுக்க வேண்டும்.
நீங்கள் எடுத்த கோலி குண்டு வெள்ளை நிறமாக இருந்தால் நீங்கள் உயிர் வாழ்வீர்கள். ஆனால், கருப்பாக இருந்தால் நீங்கள் இறந்த வீடுவீர்கள்.
நீங்கள் வெள்ளை கோலிகுண்டை தேர்ந்தெடுக்க ஏதுவாக கோலிகுண்டுகளை எவ்வாறு பிரிப்பீர்கள்?

விடை:
ஒரே ஒரு வெள்ளை கோலிகுண்டை ஒரு கிண்ணத்திலும், மற்ற பிற கோலிகுண்டுகளை இரண்டாம் கிண்ணத்திலும் (49 வெள்ளை கோலி குண்டையும், 50 கருப்பு குண்டையும்) போட்டுவிடுங்கள்.
இம்மாதிரியாக செய்தால் நீங்கள் வெள்ளை கோலிகுண்டை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு 50/50 சதவீதம் உண்டு.
நீங்கள் மற்றொரு கிண்ணத்தை தேர்ந்தெடுத்தாலும், அதில் உள்ள 49 வெள்ளை கோலி குண்டில் ஒன்றை எடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக உண்டு.
இந்த புதிர், `ரோசெட்டா ஸ்டோன்` நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது
முந்தைய புதிர்கள்:
- படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்? புதிரை கண்டுபிடியுங்கள்!
- கேக்கை தின்றவர் யார்? புதிரை கண்டுபிடித்து ராணிக்கு உதவுங்கள்
- பொய் சொல்பவர் யார்? புதிரை கண்டுபிடியுங்கள்!
- போலி தங்கக்கட்டி எது? புதிரை கண்டுபிடியுங்கள்!
- கரடியின் நிறம் என்ன? புதிரை கண்டுபிடியுங்கள்!
- பால்காரருக்கு உதவ முடியுமா? புதிரை கண்டுபிடியுங்கள்!
- ஆறாவது நாடு என்னவாக இருக்கும்? புதிரைக் கண்டுபிடியுங்கள்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













