சீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம்

பட மூலாதாரம், PEAR VIDEO
மிங் வம்சத்தின் ரகசிய காவல்துறையை நினைவுபடுத்தும் விதமாக ஜினிவெய் என்று செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமின்றி அனைவரும் தனிப்பட்ட பாதுகாவலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் செயலி அறிமுகப்படுத்தவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
'ஜினிவேய்' என்ற செயலி, செப்டம்பர் மாதம் ஷிண்டாவோவில் தொடங்கப்படவுள்ளது. ஊபர் போன்ற சேவைகளை வழங்கும் இந்த செயலி, நகரம் முழுவதும் உள்ள 57 பாதுகாப்பு நிறுவனங்களின் 50 ஆயிரம் ஊழியர்களை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும் வசதியை வழங்கும்.
பாதுகாப்பற்று உணரும் எவரும் பாதுகாவலர் சேவைகளை பெறலாம். குறிப்பாக மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் செல்லும்போது பாதுகாவலர்களை பயன்படுத்தலாம். டாக்ஸி சேவைகளில் இருப்பதைப் போன்றே, தேவைப்படும் சமயத்தில் பாதுகாவலர்கள் கிடைப்பதை செயலியின் மூலம் பயன்பாட்டாளர்கள் தெரிந்து கொள்ளமுடியும்.
ஒரு மணி நேரத்திற்கு 70 முதல் 200 யுவான் ($ 10.50- £ 30; £ 8.15- £ 23) என்ற விலைக்கு இந்த செயலி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;
தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த செயலி பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் சீனா டெய்லி ஆங்கில நாளிதழ் கூறுகிறது.
முன்னாள் ராணுவ அதிகாரிகள், இந்த பாதுகாவலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுடைய தற்போதைய அடையாள அட்டை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்தது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் காட்டவேண்டும் என்று இந்த செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான லி ஷாங்ஷாங் கூறுகிறார்.

பட மூலாதாரம், PEAR VIDEO
"பாதுகாவலராக பணிபுரிபவர்கள், பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும், பணியின்போது சீருடை அணிந்திருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். சண்டைகளின் போதும் அவர்கள் போலீசாருடன் இணைந்து செயல்படலாம் என்றும் அவர் கூறினார்.
சீனாவின் சமூக ஊடக தளமான 'சினா வெய்போ'வில் இந்த சேவை குறித்து பலவிதமான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்படுபவர்களுக்கு "பயனுள்ளது" என்றும் "நல்ல யோசனை" என்றும் பலர் வரவேற்கின்றனர். ஆனால் சிலரோ, துணை தேடும் தனியாக இருக்கும் பெண்கள் இந்த செயலியை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்று அச்சம் எழுப்புகின்றனர்.
இந்த சேவை அறிமுகப்படுத்துவது என்றால், போலீசார் இருப்பதற்கான பொருள் என்ன என்று ஒருவர் குறிப்பாக கேட்கிறார்.
பாதுகாப்பு இல்லை என்று கருதுபவர்கள் பயன்படுத்த ஏற்றது என்கிறார் செயலி வடிவமைப்பாளர்களில் ஒருவரான லி ஷாங்ஷாங்.
பிற செய்திகள் :
- டிவிட்டரில் கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த மித்தாலி
- முத்தலாக் தீர்ப்பு வெற்றியை கொண்டாட ஷயரா பானு அழைப்பு
- கப்பல்துறையை குறிவைக்கும் ஹேக்கர்கள்: திணறும் கப்பல் நிறுவனங்கள்
- அதிமுக அரசுக்கு தினகரன் சவாலா?: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
- `இதுதான் தர்மயுத்தமா?` கேள்விக்கணை தொடுக்கும் மக்கள்
- தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள்: ஆளுநரைச் சந்திக்க முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












