பின்லாந்து: பலரை கத்தியால் குத்தியவரை சுட்டுப்பிடித்தத காவல்துறை
பின்லாந்து நாட்டின் தென் மேற்கு நகரான டூர்க்குவில் பலரைக் கத்தியால் குத்திய நபரைச் சுட்டுப் பிடித்துள்ளதாக அந்நாட்டுக் காவல் துறை கூறியுள்ளது.

பட மூலாதாரம், LEE HILLS
காலில் சுடப்பட்ட அந்த நபர் தற்போது தங்கள் காவலில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நகரின் மையப் பகுதிக்கு வர வேண்டாம் என்று பொது மக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சம்பவம் பூட்டோரி அங்காடி சதுக்கத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வெளியான ஒரு புகைப்படத்தில் ஒரு உடல், துணியால் மூடப்பட்டு தரையில் கிடப்பதைக் காண முடிகிறது.
ஐந்து அல்லது 6 பேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இறந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வமான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

உள்ளூர் நேரப்படி மாலை 4.40 மணிக்கு பதிவிடப்பட்ட, காவல் துறையின் ஒரு ட்விட்டர் பதிவில், மத்திய டூர்க்கு பகுதியில் பலர் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும்,பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












