பின்லாந்தின் தலைநகரில் குக்கென்ஹீம் அருங்காட்சியகத்தைக் கட்டும் திட்டம் நிராகரிப்பு
பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியின் நகர கவுன்சில், வரலாற்றுச் சிறப்பு மிக்க குக்கென்ஹீம் அருங்காட்சியகத்தைக் கட்டும் திட்டத்தை நிராகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
குக்கென்ஹீம் அருங்காட்சியகத்தைக் கட்டுவதற்கு சுமார் 140 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. இந்தச் செலவில் ஹெல்சிங்கியின் நகர கவுன்சில் தான் பெரும் பங்கை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. சிக்கன நடவடிக்கை கடைப்பிடிக்கப்படும் இந்த நேரத்தில், இது பெரும் தொகையாக உள்ளது என கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த முடிவு, உலகமயத்திற்கு எதிரான வெளிப்பாடு என்றும் இதனால் ஏமாற்றமடைந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள குக்கென்ஹீம் அறக்கட்டளையின் இயக்குநர் ரிச்சர்ட் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி கூட்டணியின் உறுப்பினரான பிரபல பின்லாந்து கட்சி, செப்டம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.








