பெண்ணாக மாறும் ஆண் மீன்கள் - காரணம் என்ன?
சாக்கடையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனங்களால் நன்னீரில் உள்ள 20 சதவீத ஆண் மீன்களுக்கு பெண் மீன்களின் குணாதிசயங்கள் ஏற்படுவதாக பிரிட்டனில் நடத்திய அறிவியல் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் உட்பட இம்மாதிரியான 200 ரசாயனப் பொருட்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ரசாயனங்களால் ஆண் மீன்கள் பெண் மீன்களின் குணாதிசயங்களைப் பெறுகின்றன.
எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சார்லஸ் டெய்லர் சில ஆண் மீன்கள் கர்ப்பமுறச் செய்ய முடியாத தன்மையைக் காட்டியதாகவும், சில ஆண் மீன்கள் வெற்றிகரமாக முட்டையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












