குறுஞ்செய்தி அனுப்பியே காதலனை தற்கொலைக்கு தூண்டியதாக காதலிக்கு சிறை!
தன்னுடைய காதலன் தற்கொலை செய்ய ஊக்கமூட்டி டஜன்கணக்கான குறுஞ்செய்திகளை அனுப்பிய பெண்ணொருவர், காதலன் இறப்புக்கு காரணமாக இருந்ததாக மாசசூசெட்ஸ் நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Facebook
இப்போது 20 வயதாகும் மிஷேல் கார்ட்டர், அனுப்பிய குறுஞ்செய்திகளால் 18 வயதான கோன்ராடு ராய் உயிரையே மாய்த்து கொள்ள தூண்டப்பட்டார். எனவே, கார்ட்டர் "தற்செயலான கொலை குற்றம்" இழைத்துள்ளதாக தண்டிக்கப்பட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் ஃபேர்ஹவனிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் கோன்ராடு ராய் தன்னுடைய வாகனத்தை ஜெனரேட்டர் மீது மோதி தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறுகின்ற காட்டர் நீதிமன்றத்தில் விம்மி விம்மி அழுதார்.

ஒருவரை தற்கொலை செய்துகொள்ள சொல்வது குற்றம் என்று குறிப்பிடுவதற்கு மாசசூசெட்ஸ் சட்டம் எதுவும் இல்லை என்பதால், இந்த வழக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகையால் நிறைந்து ராய் வெளியேறியிருந்த டிரக்கிற்கு பின்னால் ஏறுமாறு சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியதன் மூலம் "விளையாட்டுத்தனம் மற்றும் பொறுப்பற்ற நடத்தை" குற்றம் புரிந்துள்ளதாக நீதிபதி லாரன்ஸ் மோனிஸ் தெரிவித்திருக்கிறார்.
"அவள் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. டிரக்கை விட்டு வெளியேறு என்று கடைசியாக எளியதொரு கூடுதல் அறிவுறுத்தலை வழங்கவில்லை" என்று நீதிபதி கூறியுள்ளார்.
நீதிபதி தன்னுடைய தீர்ப்பை வாசித்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட மிஷேல் கார்ட்டர் அழுது துடித்தார்.

பட மூலாதாரம், WCVB
கோன்ராடு ராய் என்று பாதிக்கப்பட்டோரின் அதே பெயரை கொண்ட இறந்துபோனவரின் தந்தை, "இந்த தீர்ப்புக்காக தன்னுடைய குடும்பம் மிகவும் நன்றியோடு உள்ளது" என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
"இது எங்களுக்கு மிகவும் துன்ப காலமாக இருந்துள்ளது. நாங்கள் மனநிறைவடைந்துள்ள இந்த தீர்ப்பை செயல்படுத்த விரும்புகின்றோம்" என்று நீதிமன்றத்திற்கு வெளியே அவர் தெரிவித்தார்.
சிறைத்தண்டனையை தாமதப்படுத்தி பிணையில் இருக்க கார்ட்டரை நீதிபதி அனுமதித்துள்ளார். ஆனால், குறுஞ்செய்திகள் அனுப்புவது அல்லது எந்தவொரு சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்தவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார்ட்டருக்கு எதிரான இந்த குற்றவியல் வழக்கில், ராய் இறந்ததில் கார்ட்டர் நேரடி கொடர்பு கொண்டிருந்தார் என்பதை அரசு வழங்கறிஞர்கள் நிரூபிக்க வேண்டியிருந்தது.
வெறுப்பால் வளரும் காதல்
இதையும் படிக்கலாம்:
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













