காதல் - உங்களுடைய புகைப்படங்கள்

ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒவ்வொரு வாரமும் வாசகர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறோம். இந்த வார தலைப்பு “காதல்”

இதய வடிவிலான பலூன்கள்

பட மூலாதாரம், Doris Enders

படக்குறிப்பு, இதய வடிவிலான பலூன்கள் பறக்கும் புகைப்படம் - எடுத்தவர் டோரிஸ் என்டர்ஸ்
பாலத்தின் மேல் ஒரு பூட்டு

பட மூலாதாரம், Tibor Acs

படக்குறிப்பு, திபோர் அக்ஸ்: பூதபெஸ்டிலுள்ள செச்செய்னீ சங்கிலி பாலத்தின் மேலுள்ள காதல் பூட்டுக்கள். ஹங்கேரியிலுள்ள மிகவும் அழகான பாலங்களில் இதுவும் ஒன்று
சாக்ஸாஃபோன் இசைக்கும் ஒருவர்

பட மூலாதாரம், Helen Jane Holman

படக்குறிப்பு, ஹெலன் ஜானி ஹோல்மான்: “ஓர் இசைக்கலைஞருக்கும் அவரது இசைக்கருவிக்கும் இடையிலுள்ள பிணைப்பு என்பது உண்மையிலேயே தனித்தன்மையான காதல்தான். இந்த இசைக்கருவியை வாசிக்கின்றபோது அவருக்கு இருக்கும் உணர்ச்சியைப் பார்த்து நான் அவர் மீது காதலில் விழுகிறேன்”.
காதல் ஜோடியான நீள் கழுத்து வாத்துகள் (ஸ்வான்)

பட மூலாதாரம், Jon Ames

படக்குறிப்பு, ஜோன் அமெஸ்: பவாரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நிழலில் ம்யூனிக்கின் தெற்கிலுள்ள கோச்செல்சியில் காதல் ஜோடியான நீள் கழுத்து வாத்துகள் (ஸ்வான்). ஆண் வாத்து இன்னொரு ஆண் பறவையோடு பறந்தும், நீரிலும் நடத்திய கண்கவர் சண்டைக்கு பின்னர், காதல் ஜோடியான பெண் வாத்தோடு நெருங்கி உருவான இதய வடிவத்தை பாதுகாக்கிறது. தனது துணையின் வெற்றியில் அந்த பெண் பறவை மகிழ்ச்சியடைவது தெளிவாக தெரிகிறது.
சிலை

பட மூலாதாரம், Angela Burton

படக்குறிப்பு, ஏங்கெலா பர்டன்: இதுவொரு சிலையின் படம். இது பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டிருந்தாலும், தாய்க்கும் சேய்க்கும் இடையிலான அன்பை நமக்கு உணர வைப்பதாக எனக்கு தோன்றுகிறது.
இரண்டு யானைகள்

பட மூலாதாரம், Ian Salisbury

படக்குறிப்பு, இயன் சலிஸ்பெரி: “யானைகளிடம் மனித பண்புகள் பல உள்ளன. ஜாம்பியாவிலுள்ள தென் லுயான்க்வா தேசிய பூங்காவில், இந்த இரு யானைகளும் காதல் வயப்பட்டுள்ளதை துதிக்கைகளை இணைத்து வெளிக்காட்டுகின்றன.
காதலை முன்மொழியும் ஒரு ஜோடி

பட மூலாதாரம், Alice Bedford

படக்குறிப்பு, ரோமிலுள்ள டிரிவி நீரூற்றில், பொதுவிடத்தில் வைத்து காதலை தெரிவிக்கும் காட்சி அலீஸ் பெட்.போர்டு என்பவரால் படம் எடுக்கப்பட்டது.
இதய வடிவ பூட்டுகள்

பட மூலாதாரம், Carol Chan

படக்குறிப்பு, கடைசியாக, கரோல் சான் படம்பிடித்த இதய வடிவ பூட்டுகள்