சஹாரா பாலைவனத்தில் பழுதான லாரியில் இருந்த 44 பேர் தாகத்தால் உயிரிழப்பு

கானா மற்றும் நைஜீரியாவில் இருந்து சஹாரா பாலைவனப் பகுதி வழியாக பயணம் மேற்கொண்ட 44 பேர் தாகத்தினால் உயிரிழந்துவிட்டதாக, ஒரு தொலைதூர கிராமத்தை சென்றடைந்த ஆறு பெண்கள் தெரிவித்தனர்.

பாலைவனத்தில் கார்

பட மூலாதாரம், AFP

இதுதொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த ஆப்பிரிக்க குடியேறிகள், லிபியா வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றனர்.

பொதுவாக வடக்கு ஆப்ரிக்க பகுதிகளுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவது வழக்கம். அங்கிருந்து மத்தியதரைக் கடலை கடந்து அவர்கள் ஐரோப்பா செல்வார்கள்.

டிரக்குகளில் செல்லும் இவர்கள் குடிப்பதற்கு சில லிட்டர் குடிநீரே கிடைக்கும்.

சஹாரா பாலைவனம் மிகப் பெரியது, இந்தப் பகுதியை கடந்து செல்ல முயலும் பல குடியேறிகள் இறந்துபோவது வழக்கமானதாக இருந்தாலும், இது குறித்த தகவல்கள் பெரிய அளவில் வெளிவருவதில்லை.

சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அல்ஜீரியா எல்லை அருகே 34 குடியேறிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன, அதில் 20 பேர் குழந்தைகள்.

பாலைவனம்

பட மூலாதாரம், Getty Images

மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் அவர்களை பாலைவனத்தில் விட்டுச் சென்றதால், தாகத்தால் அவர்கள் இறந்ததாக நைஜர் நாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

நல்ல வாழ்க்கைக்கான தேடலில் கடினமான பாதையில் பயணம்

சஹாரா பாலைவனத்தின் வழியாக பயணம் மேற்கொள்ளும்பொது, வாகனம் பழுதுபட்டால், பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பது அரிது என்று நைஜீரியா பிபிசி செய்தியாளர் மார்டின் பென்செஸ் கூறுகிறார்

நல்ல வாழ்க்கையை தேடி ஐரோப்பா செல்ல நினைப்பவர்கள், கடினமான பாதையில் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் நைஜர் வழியாக ஐரோப்பாவிற்கு செல்கின்றனர்.

பயணப்படுபவர்களில் எத்தனை பேர் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைகிறார்கள் என்பதும், எவ்வளவு பேர் மரணிக்கிறார்கள் என்பதை கணக்கிடுவது இயலாதது. பாலைவனப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் தாகத்தால் மரணங்கள் நேரிடுகிறது. அதோடு, கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆட்பட்டு தங்களிடம் உள்ள பொருட்களை பறிகொடுத்து, உயிரையும் விடுகின்றனர் பயணிகள்.

காணொளி: குடிப்பதை கட்டுப்படுத்த தென் ஆப்ரிகாவில் புதுச்சட்டம்

காணொளிக் குறிப்பு, குடிப்பதை கட்டுப்படுத்த தென் ஆப்ரிகாவில் புதுச்சட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்