இந்திய-ஆப்ரிக்க உறவுகள் மேலும் வலுப்பெற மோடி அழைப்பு

இந்தியா மற்றும் ஆப்ரிக்கா இடையே "வளத்துக்கான ஒரு புதிய ஒத்துழைப்பை" இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற இந்திய-ஆப்ரிக்க உச்சிமாநாட்டில் ஆப்ரிக்கத் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் மோடி

பட மூலாதாரம், pmindia.nic.in

படக்குறிப்பு, புதுடில்லியில் நடைபெற்ற இந்திய-ஆப்ரிக்க உச்சிமாநாட்டில் ஆப்ரிக்கத் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் மோடி

ஆப்ரிக்கவிலிருந்து ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் டில்லியில் பங்குபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே மோடி இதை வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற இந்திய-ஆப்ரிக்க உச்சிமாநாட்டில் இருதரப்புக்கும் இடையேயான வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

உலகிலுள்ள மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரின் கனவுகள் ஒரே கூரையின் கீழ் இப்போது ஒருங்கிணைந்துள்ளன என்று மோடி அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜிம்பாப்வே அதிபர் முகாபேயுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

பட மூலாதாரம், pmindia.nic.in

படக்குறிப்பு, ஜிம்பாப்வே அதிபர் முகாபேயுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

உலக விஷயங்களில் இந்தியாவும், ஆப்ரிகாவும் ஒரே குரலில் பேச வேண்டும் என்றும், அதில் ஐ நா சீரமைப்பும் அடங்கும் என்றும் மோடி அக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே தெரிவித்தார்.

ஐ நா பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்திர உறுப்பினராக இருக்க விழையும் நேரத்தில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

ஆப்ரிக்காவின் இயற்கை வளங்களில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ள அதே நேரம், ஆப்ரிக்க நாடுகள் தகவல் தொழில்நுட்பம், மொபைல் தொலைபேசி சேவைகள் போன்ற துறைகளில் இந்தியாவின் அனுபவத்தின் மூலம் பலனடைய விரும்புகின்றன என டில்லியிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.