புற்றுநோயை எதிர்த்து போராடிய 'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகன் சர் ரோஜர் மூர் மரணம்

பட மூலாதாரம், Keystone
ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து நன்கு அறியப்பட்ட நடிகர் சர் ரோஜர் மூர் தனது 89வது வயதில் காலமாகிவிட்டதாக அவருடைய குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
'லிவ் ஆண்ட் லெட் டை' மற்றும் 'தி ஸ்பை ஹூ லவ்டு மீ' உள்பட ஏழு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் பிரபல ரகசிய உளவாளி கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

பட மூலாதாரம், Larry Ellis
சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் சர் ரோஜர் மூரின் குடும்பத்தார் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிற செய்திகள் :
குறைந்த காலமே என்றாலும் புற்றுநோயை எதிர்த்து மூர் தைரியமாக போராடினார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
''நன்றி அப்பா நீங்கள் நீங்களாகவே இருந்ததிற்கும், மக்கள் பலருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மனிதராக இருந்ததிற்கும்.'' என்று ரோஜர் மூரின் குழந்தைகளிடம் வந்த அறிக்கை ஒன்று இவ்வாறு தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், ''கனத்த இதயத்துடன் எங்களுடைய தந்தை சர் ரோஜர் மூர் இன்று மரணமடைந்துவிட்டார் என்ற மோசமானசெய்தியை நாம் பகிர வேண்டும். நாங்கள் அனைவரும் அவருடைய மரணத்தால் நிலைகுலைந்து போயுள்ளோம்'' என்றும்அதில் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












