கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள் நியமனம் (புகைப்படத் தொகுப்பு)

கேரள மாநிலம் கொச்சியில் விரைவில் தொடங்கப்படவுள்ள மெட்ரோ ரயில் சேவையில், பாலின ரீதியான பாகுபாட்டை எதிர்த்து போராடும் நோக்கில் 23 திருநங்கைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
படக்குறிப்பு, மெட்ரோ ரயில் சேவை பணியில் நியமிக்கப்பட்ட திருநங்கைகள் மெட்ரோ ரயிலில் செல்பி எடுத்துக் கொள்ளும் காட்சி
கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
படக்குறிப்பு, கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் 23 திருநங்கைகளை நியமித்ததன் மூலம், முதல்முறையாக இந்திய அரசு சேவையில் திருநங்கைகளுக்கு பணி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
படக்குறிப்பு, புதிதாக நியமிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் செயல்பாடு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது
கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
படக்குறிப்பு, கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
படக்குறிப்பு, இத்திருநங்கைகள் பயண சீட்டு முகவர்களாகவும், துப்புரவு பணியாளர்களாகவும் நியமிக்கப்படுவதாக செய்தியாளர்களிடம் மெட்ரோ ரயில் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்
கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
படக்குறிப்பு, மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகளை நியமிப்பதன் மூலம், மற்ற நிறுவங்களும் இவர்களை பணியில் அமர்த்தும் என்று தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
படக்குறிப்பு, கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
கொச்சி மெட்ரோ ரயில் சேவை பணியில் திருநங்கைகள்
படக்குறிப்பு, மெட்ரோ ரயில் சேவை இன்னமும் தொடங்கப்படாத நிலையில், தாங்கள் பணியில் சேரும் நாள் குறித்து மிகவும் ஆர்வமாக இருப்பதாக பணி நியமனம் செய்யப்பட்ட திருநங்கைகள் குறிப்பிட்டனர்.