ஒருபால் உறவு காட்சி சர்ச்சை: மலேசியாவில் 'பியூட்டி அண்ட் பீஸ்ட்' திரைப்படம் வெளியாகுமா?

மலேசியாவில் வெளியாகவுள்ள 'பியூட்டி அண்ட் பீஸ்ட்' (Beauty and Beast) திரைப்படத்தில் உள்ள ஒருபால் உறவு காட்சி வெட்டப்படாது என்று டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) மலேசியாவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் வெளியீடு கேள்விக்குறியாகியுள்ளது.

பியூட்டி அண்ட் பீஸ்ட் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரமான காஸ்டனுடன் சேர்ந்து வலம் வரும் கதாபாத்திரமான பிரசித்தி பெற்ற லாஃபோ கதாபாத்திரத்தை ஒருபால் உறவு கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளதால், இது அந்நாட்டின் சமூக பழமைவாதிகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.

டிஸ்னி நிறுவன திரைப்படங்களில் வெளிப்படையாக சித்தரிக்கப்பட்ட முதல் ஒருபால் உறவு கதாப்பாத்திரமாக லாஃபோ கதாப்பாத்திம் இத்திரைப்படத்தில் அமைந்துள்ளளது.

மலேசியாவில் ஒருபால் உறவு நடவடிக்கைகள் மதசார்பற்ற மற்றும் மத ரீதியான சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானது.

ஒருபால் உறவில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை அல்லது உடல்ரீதியான கடுந்தண்டனை அளிக்க மலேசிய நாட்டு சட்டத்தில் வாய்ப்புண்டு.

மலேசியாவில் வெளியாகும் திரைப்படங்களில் ஒருபால் உறவு கதாபாத்திரங்களை தவறு செய்தவர் என்பது போல் சித்தரித்தோ அல்லது வருந்தும் விதமாக மட்டுமே காண்பிக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்