வட கொரியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தகவல்

வட கொரியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கிம் ஒன் ஹொங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தென் கொரியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்

பட மூலாதாரம், Getty Images

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட சித்ரவதை போன்ற காரணங்களுக்காக இந்த அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய ஒன்றிணைப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் கிம் ஒன் ஹொங், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னுடன் மிகவும் நெருங்கியவராக பார்க்கப்படுகிறார்.

இந்த பதவி நீக்கம் குறித்த செய்திகள் பற்றி வட கொரியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், 2011 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் கிம் ஜோங் உன் ஆளும் அரசின் ஊழலில் சிக்கும் மூத்த உறுப்பினர்களை பதவியில் இருந்து அகற்றி வருகிறார்.

அதில் ஒருவர் விமான எதிர்ப்பு பீரங்கியால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்