அணுகுண்டு ஏவுகணையில் மேம்பாடு ; வட கொரிய அதிபரின் சர்ச்சை புத்தாண்டு உரை

அணுகுண்டுகளை தாங்கிச்செல்லும் திறன் படைத்த தொலைதூர ஏவுகணைகளை சோதிக்கும் திறனை வட கொரியா நெருங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார்.

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நாட்டு மக்கள்முன் தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நாட்டு மக்கள்முன் தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் மேம்பாடு இறுதி கட்டத்தில் இருப்பதாக தனது புத்தாண்டு உரையின் போது கிம் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு வட கொரியா மேற்கொண்ட ஒரு மிகப்பெரிய அணு ஆயுத பரிசோதனை உள்பட மொத்தம் இரு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.

அணு ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வட கொரியா அடைந்துவிட்டதால் அது அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அப்படியொரு ஏவுகணையை வட கொரியா இதுவரை வெற்றிகரமாக சோதிக்கவல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு உலகில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகளுக்கு :