பொன்னியின் செல்வன்-1 டிரைலர் & இசை வெளியீட்டு விழா: சில சுவாரசிய தகவல்கள்

பட மூலாதாரம், Madras talkies
'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அது குறித்த சில சுவாரசிய தகவல்கள் இங்கே.
- பிரபல நாவலாசிரியர் கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் இம்மாதம் (செப்டம்பர் 30-ம் தேதி) திரைக்கு வர உள்ளது.
- சமீபத்தில் மறைந்த பாடகர் பம்பா பாக்யா இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொன்னி நதி பாக்கணுமே' என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்து பாடியுள்ளார்.
- இப்படத்தின் பாடல் உரிமை மட்டும் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
- இப்படத்தின் தொடக்க அறிவிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்தாலும் 2022 செப்டம்பரில்தான் இப்படத்தின் முதலாம் பாகம் வெளியாகிறது. ஆனால் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் 120 நாட்களில் நிறைவு செய்துள்ளார் மணிரத்னம்.

பட மூலாதாரம், Lyca production twitter page
- இன்று நடைபெற உள்ள நிகிழ்ச்சிக்காக பிரம்மாண்ட செட்டுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழுவுடன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
- இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சோழர் காலத்தில் பயன்படுத்திய பல இசை கருவிகளை பயன்படுத்தி உள்ளார்.
- படக்குழுவினருடன் இணைந்து பல திரைப்பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்ள உள்ளனர்.
- இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை Tips official நிறுவனம் பெற்று இருந்த நிலையில் இசைவெளியீட்டு விழாவின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு மற்றும் திரைப்பட தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
- உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றி உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








