சினிமா: இந்த வாரம் என்ன படங்கள், தொடர்களைப் பார்க்கலாம்?

கோப்ரா

பட மூலாதாரம், @AJAYGNANAMUTHU

இந்த வாரம் விநாயக சதுர்த்தி வாரத்தின் நடுப்பகுதியில் வந்துவிட்டதால், வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக புதன்கிழமையே படங்கள் வெளியாகிவிட்டன. ஓடிடி தளங்களில் வழக்கம்போல வெள்ளிக்கிழமையே படங்களும் தொடர்களும் வெளியாகியுள்ளன. அப்படி என்னென்ன படங்கள், தொடர்கள் வெளியாகியுள்ளன?

கோப்ரா: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்தப் படம் புதன்கிழமையே வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. மிக முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படும் நிலையில், அந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார், ஏன் செய்கிறார்கள் என்பதுதான் கதை. வியாழக்கிழமையன்று படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருப்பதால், படத்திற்குக் கூடுதல் வரவேற்புக் கிடைக்குமென படக்குழு எதிர்பார்க்கிறது.

நட்சத்திரம் நகர்கிறது

பட மூலாதாரம், TWITTER/@OFFICIALNEELAM

நட்சத்திரம் நகர்கிறது: பா. ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படமும் புதன்கிழமையே வெளியாகிவிட்டது. படத்தில் தென்படும் பிரச்சார நெடியும் நீளமும் பலவீனமான அம்சங்கள் என்றாலும், மிக முக்கியமாந திரைப்படங்கள் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

சுந்தரி கார்டன்ஸ்

பட மூலாதாரம், @Aparnabala2/Twitter

சுந்தரி கார்டன்ஸ் (மலையாளம்): அபர்ணா பாலமுரளி, ஷ்ருதி சுரேஷ், பினு பாப்பு நடித்த இந்தப் படம் சோனி லைவில் வெளியாகியுள்ளது. விவாகரத்து பெற்றுவிட்டு, பள்ளிக்கூட நூலகமொன்றில் பணியாற்றும் நாயகி, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வரும் நாயகன் மீது ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், அந்தக் காதல் கைகூடுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு எளிமையான, ஜாலியான திரைப்படம் பார்க்க விரும்புபவர்கள் இதைப் பார்க்கலாம்.

Lord of the Rings: The Rings of Powe

பட மூலாதாரம், @LOTRonPrime/Twitter

Lord of the Rings: The Rings of Power: ஜே.ஆர்.ஆர். டால்க்கெய்னின் புகழ்பெற்ற நாவலின் அடிப்படையில் 2001லிருந்து வெளிவந்த Lord of the Rings வரிசை படங்களின் தொடர்ச்சியாக இப்போது The Rings of Power தொடர் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியாவதற்குப் பதிலாக, தற்போது Amazon Prime OTTல் இந்தத் தொடர் வெளியாகியிருக்கிறது. 8 பாகங்களைக் கொண்ட முதல் சீஸன் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்தத் தொடர் குறித்து பொதுவாக பாசிட்டிவான பதிவுகளே வெளியாகிவந்தாலும், தொடர் சற்று மெதுவாக நகர்கிறது என்ற விமர்சனமும் இருக்கிறது.

Cuttputlli

பட மூலாதாரம், @akshaykumar/Twitter

Cuttputlli: 2018ல் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்து தமிழில் வெளியான ராட்சசன் திரைப்படத்தின் இந்தி ரீ - மேக். இந்தப் படத்தில் அக்ஷய் குமார், ரகுல் ப்ரீத் சிங், சந்த்ரசூர் சிங் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். நகரில் குழந்தைகளைக் கடத்தும் கும்பலை எதிர்கொள்ளும் காவல்துறை அதிகாரியின் கதை இது. Disney + Hotstarல் வெளியாகியிருக்கிறது.

இவை தவிர, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் ZEE5ல் வெளியாகியிருக்கிறது. தமிழில் பார்த்திபன் நடித்து வெளியான ஒத்த செருப்பு படத்தின் ரீமேக்கான Degala babji என்ற தெலுங்குப் படம் மே 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அந்தப் படம் தற்போது Aha ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான காட்டேரி திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. கன்னடப் படமான விக்ராந்த் ரோணா, Khuda Hafiz - 2 ஆகியவை Zee5 ஓடிடியில் வெளியாகியுள்ளன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: