'வாரிசு' - தொடர்ந்து கசியும் பட காட்சிகள் - இந்த வார சினிமா உலக செய்திகள்

வாரிசு

பட மூலாதாரம், Sri venkateshwara creation

    • எழுதியவர், நபில் அஹமது
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரு. 'வாரிசு' படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'வாரிசு' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார்.நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் சரத்குமார், நடிகை குஷ்பு, நடிகர் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி தயாரிப்பு தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனால் படக்குழுவினர் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த மாதத்தில் மட்டும் இத்துடன் மூன்று முறை வாரிசு படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் படக்குழுவினருக்கு தயாரிப்பு தரப்பினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிரட்டலான லுக்கில் 'ஜெயிலர்' ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்'ஜெயிலர்'. இப்படத்தின் முதல் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

ஜெயிலர்

பட மூலாதாரம், sun pictures

'ஜெயிலர்' படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. இப்படத்திற்காக சென்னையை சுற்றி பல இடங்களில் செட்-கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது அதன் பின் ஹைதராபாத் செல்ல உள்ளனர்.

இதனிடையே, இப்படத்தில் நடிக்கும் நான்கு முக்கிய நடிகர்களான ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் பெயர்களையும் போஸ்டர்களாக படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகை தமன்னா சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் களத்தில் இந்தியன் 2

'இந்தியன் 2'

பட மூலாதாரம், Lyca production

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துவந்த 'இந்தியன் 2' திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.450 கோடி மேல் வசூலை வாரிகுவித்ததால் தற்போது 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது.

படிப்படிப்பு துவங்கதற்கான அறிவிப்பாக இப்படத்தின் புதிய போஸ்டரைப் 'He is back' என்கிற வசனத்துடன் படக்குழுவினர் வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து இப்படத்ததின் படப்பிடிப்பு பூஜைகளுடன் மீண்டும் துவங்கியுள்ளது.

படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெய்ண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது.

இரட்டை வேடத்தில் மீண்டும் நடிக்கும் நடிகர் சூர்யா

இயக்குநர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படக் குழுவினருடன் நடிகர் சூர்யா

பட மூலாதாரம், studio green

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் வரும் வாரம் சூர்யா 42-இன் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார், 1980களில் நடக்கும் கதைக்களமாக தற்போது கதைக்களமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் படக்குழு இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

'கோப்ரா' ப்ரோமோஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் 'கோப்ரா' , நடிகர் விக்ரமுடன் 'கேஜிஎஃப்' நாயகி ஸ்ரீந்தி ஷெட்டி ஜோடியாக நடித்துள்ளார். மேலும், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கோப்ரா

பட மூலாதாரம், Yuvraj PR

வரும் 31ம் தேதி இப்படம் திரையரங்குகளுக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக படக்குழு சென்னை, மதுரை, கோவை, திருச்சி என ஒரு ரவுண்ட் வருகிறது. படக்குழு செல்லும் இடமெல்லாம் நடிகர் விக்ரமை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சிரஞ்சீவியுடன் கரம்கோர்க்கும் சல்மான் கான்

மலையாள சினிமா உலகில் நடிகர் பிரத்விராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் லூசிஃபர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 'காட்ஃபாதர்' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகி உள்ளது. இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மோகன்லால் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிரஞ்சீவியின் கொணிடெலா தயாரிப்பு நிறுவனத்துடன் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

சிரஞ்சீவி

பட மூலாதாரம், super good films

2017-ல் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை இயக்கிய இயக்குநர் மோகன் ராஜா பல ஆண்டுகள் கழித்து தற்போது காட்ஃபாதர் படத்தை இயக்கியுள்ளார்.கடந்த வாரம் தனது 67வது பிறந்தநாளினை கொண்டாடிய சிரஞ்சீவிக்கு பரிசாக படக்குழு படத்தின் டீஸரை வெளியிட்டது. லூசிஃபரில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நடிகை நயன்தாராவும் ஜான் விஜய் வேடத்தில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனியும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்ப்பார்கப்பட்ட பிருத்விராஜ் வேடத்தில் யார் நடிக்க உள்ளார் என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக அக்கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: