ஜீவி-2, தமிழ் ராக்கர்ஸ்: இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்ன?

பட மூலாதாரம், Sun Pictures
இந்த வாரம் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரையரங்குகளில் வெளியாகியிருப்பதால், வேறு படங்கள் ஏதும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால், ஓடிடியில் பல படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் வெளியாகும் படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட் இதோ.
திருச்சிற்றம்பலம்: தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானிஷங்கர் நடித்த இந்தப் படம் ஆகஸ்ட் 18ஆம் தேதியே வெளியாகிவிட்டது. சரியான காதலைத் தேடும் இளைஞனின் கதையை, குடும்பத்திற்குள் உள்ள ஒரு மோதலின் பின்னணியில் சொல்லும் படம் இது. மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வெளியாகிவருகின்றன.
ஜீவி - 2: ஜீவி படத்தின் முதல் பாகம் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு திரைப்படமாக அமைந்தது. முக்கோண விதி தொடர்பியல் போன்றவற்றை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தது பலரையும் கவர்ந்த நிலையில்தான், இரண்டாம் பாகம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. இந்தப் படத்தையும் முதல் படத்தை இயக்கிய வி.ஜே. கோபிநாத்தே இயக்கியிருக்கிறார். படம் Aha OTTல் வெளியாகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழ் ராக்கர்ஸ்: மிகப் பெரிய செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் உடனுக்குடன் தமிழ்ராக்கர்ஸ் போன்ற தளங்களில் வெளியாகிவருவது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. அந்த சினிமா பைரஸி குறித்த வெப் சீரிஸ்தான் இந்த 'தமிழ் ராக்கர்ஸ்'. இந்தத் தொடரின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது ஏவிஎம் நிறுவனம். ஈரம், வல்லினம், ஆறாது சினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள் போன்றவர்கள் இந்தத் தொடரில் நடித்துள்ளனர். இது Sonylivல் வெளியாகிறது.
Highway (தெலுங்கு): ஆனந்த் தேவரகொண்டா, அபிஷேக் பானர்ஜி, சயாமி கெர் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஏகேவி குஹன் இயக்கியிருக்கிறார். ஒரு சைக்கோ கொலைகாரனைப் பற்றிய த்ரில்லர் திரைப்படம் இது. Aha OTTல் வெளியாகிறது.

பட மூலாதாரம், @SonyLIV / Twitter
Duranga: நகரில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்க ஆரம்பிக்கிறாள் காவல்துறை அதிகாரியான இரா. அந்த விசாரணை அவளது கணவனின் மற்றொரு பக்கத்தை அவளுக்குக் காட்டுகிறது. குல்ஷன் தேவைய்யா, த்ரஷ்டி தாமி தாமி நடித்திருக்கும் இந்தத் த்ரில்லர் தொடர் Zee 5 OTTல் வெளியாகிறது.
Echoes: இது ஒரு மினி சீரிஸ். ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்களான லெனியும் ஜினாவும் ரகசியமாக இடம்மாறிக் கொள்கிறார்கள். இதில் ஒருவர் கடத்தப்பட மற்றொருவரின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. யார் கடத்தினார்கள், எதற்காக என்பதுதான் இந்த மர்ம த்ரில்லரின் கதை. Netflixல் வெளியாகிறது.
இவை தவிர, ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் zee5 OTTல் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியான மலையாள த்ரில்லர் திரைப்படமான Heaven Disney+ Hotstarலும் வெளியாகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













