லலித் மோதி, சுஷ்மிதாவின் டேட்டிங் படம் வைரல் - என்ன சொன்னார் முன்னாள் காதலர்?

லலித் மோதி சுஷ்மிதா சென்

பட மூலாதாரம், LALIT MODI

பாலிவுட்டின் புதிய ஜோடியாக பொதுவெளியில் அறியப்பட்டவர்கள் ஆகியிருக்கிறார்கள் முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் மற்றும் முன்னாள் ஐபிஎல் தலைவரும் தொழிலதிபருமான லலித் மோதி. இருவரும் டேட்டிங்கில் இருக்கும் தகவல், சுஷ்மிதா சென்னின் ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சுஷ்மிதாவின் முன்னாள் காதலரான ரோஹ்மன் ஷாலும் இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை லலித் மோதி தமது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டபோதுதான் இந்த இருவருக்கும் இடையிலான காதல் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து ரோஹ்மன் ஷால் கருத்து கூறும்போது, "அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். காதல் அழகானது. சுஷ்மிதா ஒருவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்த நபர் அதற்குத் தகுதியானவர் என்பது எனக்குத் தெரியும்," என்று தெரிவித்துள்ளார்.

இது தவிர இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவையும் ரோஹ்மன் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ஒருவரைப் பார்த்துச் சிரிப்பதன் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைத்தால், சிரிக்கவும் என்று ரோஹ்மான் எழுதியுள்ளார்.

2px presentational grey line
2px presentational grey line

16 வயது இளையவருடன் காதல்

சுஷ்மிதா சென்னுடன் உறவில் இருந்த ரோஹ்மன் ஷால் அவரை விட 16 வயது இளையவர். இருவரும் 2018இல் ஒருவரையொருவர் டேட்டிங் செய்யத் தொடங்கினர். அதே நேரத்தில், 2021 டிசம்பர் 23ஆம் தேதி இந்த ஜோடி பிரிந்தது. ரோஹ்மனுடன் உறவைப் பேண முடியவில்லை என்று கூறி அவரை பிரிவதாக சுஷ்மிதா கூறினார்.

இது தொடர்பான பதிவில், "நாங்கள் நண்பர்களாக உறவைத் தொடங்கினோம். நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம்!! அந்த நேசம் தொடரும்," என்று சுஷ்மிதா கூறியிருந்தார்.

இந்தியரான லலித் மோதி லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக வரி ஏய்ப்பு மற்றும் பணப்பரிவர்த்தனை வழக்குகளை இந்திய அமலாக்கத்துறை உள்நாட்டில் தொடர்ந்த பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேறி 2010இல் லண்டனில் குடியேறினார்.

இந்த நிலையில், சுஷ்மிதாவுடனான காதல் பற்றிய தகவலை அவரே கசிய விட்டதன் மூலம் பாலிவுட் ஊடகங்களில் அவர் தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறார்.

"குடும்பங்களுடன் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு லண்டனுக்குத் திரும்பி வந்தேன். குடும்பங்களுடன் #மாலத்தீவுகள் #சார்டினியாவுக்கு சென்றேன். - எனது சிறந்த துணை @sushmitasen47-ஐ குறிப்பிட்டாக வேண்டும். ஒரு வழியாக ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கம் அதுவும் நிலவுக்கு மேல் தொடங்கியிருக்கிறது," என்று லலித் மோதி ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவைக் கடந்த 1 மணியளவில் ட்வீட் செய்திருந்தார். அந்த இடுகையில் சுஷ்மிதாவுடன் நெருக்கமாக இருக்கும் சில படங்களை அவர் பகிர்ந்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த இடுகையை இதுவரை 7,446 பேர் லைக் செய்துள்ளனர். 468 முறை மறுட்வீட் செய்யப்பட்டுள்ளது. பலர் இந்த ஜோடியை வாழ்த்தினார்கள். சிலர் இவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டி இடுகைகளை பதிவிட்டனர்.

வேறு சிலர் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டீர்களா இல்லை செய்யப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், லலித் மோதியே இரண்டாவது ட்வீட் செய்து அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

லலித் மோதி

இருவரும் 'வெறும் டேட்டிங்' மட்டுமே செய்கிறோம். திருமணமாகவில்லை - ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்கிறோம். அதுவும் ஒரு நாள் நடக்கும்," என்று லலித் மோதி கூறியுள்ளார்.

இந்த இடுகைகள் மற்றும் லலித் மோதி, சுஷ்மிதாவின் படங்கள் சமூக ஊடக பக்கங்களில் வைரலானதையடுத்து, மாலையில் சுஷ்மிதா சென் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு இடுகையை பதிவிட்டார்.

அதில், தனது இரண்டு மகள்களான அலிசா மற்றும் ரெனியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த அவர், எனக்கு திருமணமாகவில்லை, 'மோதிரங்கள் மாற்றிக் கொள்ளவில்லை' என்றும் கூறியுள்ளார்.

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

மேலும் அவர், "நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன்!!!😁🤗❤️💃🏻💋திருமணம் செய்யவில்லை...நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. இப்போது இயல்பு வாழ்க்கைக்கும் வேலைக்கும் திரும்புகிறேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்தவர்களுக்கும் பகிராதவர்களுக்கும் நன்றிகள்!!" என்று குறிப்பிட்டுள்ளார்.

லலித் மோதி முன்பு மினால் சக்ரானி என்பவரை 1991ஆம் ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ருசிர் என்ற மகனும் அலியா என்ற மகளும் உள்ளனர். மினாலின் முதல் திருமணத்திலிருந்து பிறந்த கரிமா சக்ரானிக்கு மோதி மாற்றாந்தந்தை ஆவார். இந்த நிலையில், 2018இல் புற்றுநோய் பாதிப்பால் மினால் இறந்தார். மறுபுறம், 2018இல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பிரபல மாடல் ரோஹ்மன் ஷாலுடன் சுஷ்மிதா உறவில் இருந்தார், கடந்த ஆண்டு அவருடனான உறவை அவர் முறித்துக் கொண்டார். சுஷ்மிதாவுக்கு ரெனி மற்றும் அலிசா என்ற இரண்டு வளர்ப்பு மகள்கள் உள்ளனர்.

2px presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :