ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு: ஆறு வாரங்களாக நடைபெற்ற விசாரணையின் பின்னணி என்ன?

ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட்டு

பட மூலாதாரம், Reuters

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு, தனது முன்னாள் மனைவியும் நடிகையுமான ஆம்பர் ஹெர்ட் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இந்த வழக்கில், ஜானி டெப்புக்கு 15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்கப்படும் என்று அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாகவும், 5 மில்லியன் டாலர் ஆம்பர் ஹெர்ட் தரப்பு தண்டனைத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நடந்த மூன்று வெவ்வெறு விசாரணையில், ஒரு முறை ஆம்பர் ஹெர்ட் தரப்பு வென்றது. இதன் மூலம், நஷ்ட ஈடாக அவருக்கு 2 மில்லியன் டாலர் வழங்கப்படும்.

என்ன நடந்தது?

ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட்டு

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2018ம் ஆண்டு, வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல அமெரிக்க பத்திரிகையில், நடிகை ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில், தான் திருமணம் உறவில் வன்முறையால் பாதிக்கப்பட்டவள் என்று தெரிவித்திருந்தார். இதில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

ஆனால், ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை, தன்னையும், தன் தொழிலையும் பாதித்தது எனக் கூறி, இது தொடர்பாக, அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தார் ஜானி டெப். இதற்கு அவரது முன்னாள் மனைவி 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி அவதூறு வழக்கு தொடுத்தார். இதற்கு பதிலடியாக, ஆம்பர் ஹெர்ட் 100 மில்லியன் டாலர் நஷ்டஈடு கோடி வழங்க வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆறு வாரங்களாக, வெர்ஜினியாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை தொலைக்காட்சியிலும் இணையத்திலும் ஒளிபரப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு, இந்த விசாரணையை கேட்டது.

இந்த வழக்கில், ஹெர்ட் தனது திருமண வாழ்வு குறித்து பொய் கூறினார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது குறித்து ஆம்பர் ஹெர்ட், "என்னுடைய ஏமாற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் இதயம் நொறுங்கிவிட்டது. என் முன்னாள் கணவரின் அதிகாரத்திற்கும், செல்வாக்கும் முன் மலையளவு ஆதாரங்கள் கூட போதுமானதாக இல்லை. இது மற்ற பெண்களையும் பாதிக்கும் என்பது குறித்தும் நான் ஏமாற்றமடைகிறேன். இது பின்னடைவே. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும் இது பின்னடைவே", என்றார்.

அதே சமயம், தீர்ப்பு குறித்து ஜானி டெப் தெரிவிக்கையில், இந்த வழக்கின் தொடக்கம் முதலே, உண்மையை வெளியில் கொண்டு வருவதே இலக்காக இருந்தது. என் வாழ்வை இந்த நீதிமன்றம் திரும்ப அளித்திருக்கிறது. உண்மை ஒருபோதும் அழியாது", என்றார்.

திருமணமும் விவகாரத்தும்

கடந்த 2011ம் ஆண்டு, 'தி ரம் டைரி' என்ற திரைப்படத்தில் நடித்தப்போது இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த 2012ம் ஆண்டு முதல் காதலிக்க தொடங்கி, 2015ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணமாகி 15 மாதங்கள் ஆன பிறகு, தங்களின் திருமண உறவு முடிவுக்கு வந்தது என்று தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டு விவகாரத்து ஆனது.

என்ன குற்றச்சாட்டுகள்?

இந்த வழக்கு விசாரணையில் ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட் - இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட்

பட மூலாதாரம், Reuters

ஜானி டெப் 2012ம் ஆண்டு முதலே தன்னை துன்புறுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் தெரிவித்தார். ஒருமுறை, அவர் தனது கையில், ஒரு டாட்டூ அணிந்திருந்தார். அதைப் பற்றி நான் கேட்டப்போது, அவர் முன்பு காதலித்த நடிகை வினோனா ரைடர் பெயர் கொண்ட டாட்டூ என்றார். அவர் நகைச்சுவை செய்கிறார் என்று அதை கேட்டு நான் சிரித்தப்போது, அவர் என்னை அறைந்தார் என்று ஆம்பர் ஹெர்ட் குற்றம்சாட்டினார்.

மேலும், தனது போதை பழக்கத்தை மறைக்க முயற்சி செய்தார் என்றும், அவர் போதையில் இருந்தபோது, கோபமாக நடந்துக்கொள்வார் எனவும் அவர் குற்றம் சாட்டினார். அதே சமயம், அவர் இயல்பாக இருக்கும்போது, தன்னிடம் மன்னிப்பு கேட்டபார் என்று அவர் கூறினார்.

"நான் ஜானியை விரும்பினேன். ஆனால், என் வாழ்வின் மிக மோசமான பகுதியாக அவர் இருந்தார்", என்று கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை ஜானி மறுத்தார்.

"துன்புறுத்துவதும், சண்டையிடுவதும் ஆம்பர் ஹெர்ட்டுக்கு வழக்கமாக இருந்தது. ஆம்பர் அடிக்கடி அவதூறு வார்த்தைகளைப் பேசுவார். மிகவும் வன்முறையாக நடந்துக்கொள்வார். அது சில சமயங்களில் கன்னத்தில்அறையாக இருக்கலாம், சில சமயங்களில் அடியாக இருக்கலாம். என் முகத்தின் மீது, டிவி ரிமோட்டையோ அல்லது மது கோப்பையையோ வீசுவார். ஒருமுறை என் படுக்கையில் இருந்து எழுந்தப்போது, விசித்தராமான ஒன்றை கண்டேன். அது மனித மலம்", என்றார்.

(2018ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த வழக்கில் இந்த குற்றச்சாட்டுகளை ஆம்பர் ஹெர்ட் மறுத்தார்)

பிற சாட்சியங்கள்:

ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு: தீர்ப்பு விவரம்

பட மூலாதாரம், Reuters

இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் துன்புறுத்திக்கொண்டார்கள் என்று ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட்டுக்கு திருமணம் உறவு தொடர்பாக ஆலோசனை வழங்கிய முன்னாள் உளவியல் ஆலோசகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜானி டெப்பின் மருத்துவக்குழு அவர் போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தார் என்று தெரிவித்தது.

ஆம்பர் ஹெர்ட் 'Borderline personality, personality disorder' என இரண்டு விதமான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இத்தகைய பல்வேறு சாட்சியங்களை விசாரித்த பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: