You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரிய ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்?
2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஸ்க்விட் கேம் தொடர் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டதே காரணமென்று கூறப்படுகிறது.
அமெரிக்க ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் 44 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் பணம் சேர்த்த சந்தாதாரர்கள் எண்ணிக்கையை விட, இரு மடங்கை விட அதிகம்.
கொரிய தொலைக்காட்சித் தொடரான ஸ்க்விட் கேம் வெளியான முதல் நான்கு வாரத்தில் 142 மில்லியன் (14.2 கோடி) குடும்பங்கள் பார்த்துள்ளனர். இதுவரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பேரால் காணப்பட்ட தொடர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது ஸ்க்விட் கேம்.
இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சற்றே மந்தமாக செயல்படத் தொடங்கிய நெட்ஃப்ளிக்ஸ் மெல்ல வேகமெடுத்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சந்தாதாரர்கள் எண்ணிக்கை உயர்வும் காலப் போக்கில் நீர்த்துப் போனது.
உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பைத் தாண்டி, இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் 8.5 மில்லியன் (85 லட்சம்) சந்தாதாரர்கள் சேர்வர் என எதிர்பார்க்கிறது.
ஸ்க்விட் கேம் தொடருக்கு முன், ப்ரிட்ஜெர்டன் தான் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடராக இருந்தது. அதை எல்லாம் ஓரங்கட்டி, பணத்துக்காக பல அபாயங்களோடு குழந்தைகள் விளையாட்டை விளையாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்க்விட் கேம் தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
21.4 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்து எடுக்கப்பட்ட ஸ்க்விட் கேம் தொடர், தற்போது சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என ப்ளூம்பெர்க் நிறுவனம் கணித்துள்ளது.
ஸ்க்விட் கேமைப் போலவே, மணி ஹெய்ஸ்ட் தொடரும் பரவலாக வெற்றி பெற்றது. அத்தொடரின் ஐந்தாவது சீசனின் முதல் பாகம் வெளியான முதல் நான்கு வார காலத்தில் 69 மில்லியன் (6.9 கோடி) பேரால் பார்க்கப்பட்டது. இவை இரண்டுமே ஆங்கில மொழியில் பிரதானமாக தயாரிக்கப்படாத தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"நாங்கள் இப்போது 45 நாடுகளில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் சினிமா படங்களை தயாரித்து வருகிறோம். மேலும் உலகம் முழுக்க உள்ள படைப்பாளர்கள் சமூகத்தினரோடும் ஆழமான உறவை ஏற்படுத்தி உள்ளோம்" என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
'கோப்ரா கை', 'டைகர் கிங்' போன்ற பிரபல தொடர்களின் அடுத்தடுத்த சீசன்கள் வரவிருப்பதால் கிறிஸ்துமஸ் காலத்தில் நிறைய புது பயனர்களை எதிர்பார்ப்பதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அது போக ரொஆல்ட் தால் (Roald Dahl) கதை நிறுவனத்தையும் கையகப்படுத்த இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கான நெறிமுறை சார் அனுமதிகள் பெற வேண்டியுள்ளன. இந்த நிறுவனத்தை கையகப்படுத்திய பின், 'சார்லி', 'சாக்லேட் ஃபேக்டரி' 'மடில்டா' போன்ற தலைப்புகள் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- விஜயபாஸ்கர், கூட்டுறவு வங்கி இளங்கோவன் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
- தெருவில் பட்டாசு வெடிக்கவேண்டாம் என்று அமீர் கான் கூறும் விளம்பரத்துக்கு பாஜக எதிர்ப்பு
- பனிமலைகள் உருகுவதால் மனித குலத்துக்கு என்ன ஆபத்து?
- அண்ணாமலை VS செந்தில் பாலாஜி: ஊழல் தொடர்பாக ட்விட்டரில் தொடரும் மோதல்
- "ஒரு படைத்தலைவனை கூட உருவாக்க முடியவில்லையா?" மதிமுக-வில் வாரிசு அரசியல் எதிர்ப்பு புயல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்