ஒருபாலுறவு, முஸ்லிம், மாற்றுத்திறனாளி: ஹாலிவுட் சினிமா விதிகளை உடைத்த 5 சூப்பர் ஹீரோக்கள்

சூப்பர் மேன்

பட மூலாதாரம், DC Comics

மார்வெல், டிசி சூப்பர் ஹீரோக்களில் அனைத்து சார்புடைய மக்களையும் உள்ளடக்கும் விதமாக பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் அதிக பன்முகத் தன்மையை கொண்டுவர டிசி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒரு முயற்சிதான் சமீபமாக டிசி காமிக்ஸ் தனது சமீபத்திய சூப்பர்மேன் ஜான் கென் இருபால் உறவுக்காரர் என்று தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் வெளியாகவுள்ள காமிக் புத்தகத்தில் ஜான், பத்திரிகையாளர் ஜே நகமுராவுடன் ஒருபால் உறவில் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.

சமீபமாக பிற சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களும் இம்மாதிரியான விதிகளை உடைத்து அதிக பன்முகத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ.

இஸ்லாமிய சூப்பர் ஹீரோ

Ms Marvel

பட மூலாதாரம், Marvel

அவர் அமெரிக்காவை சேர்ந்த 16 வயது இஸ்லாமியப் பெண் கமலா கான். பதின்பருவ பெண்களுக்கு உண்டான அனைத்து பிரச்னைகளும் இவருக்கு உண்டு.

கமலா கானிற்கு தனது உருவத்தை மாற்றும் அதீத சக்தி கிடைக்கிறது. அதன்பின் அவர் தனக்கு விருப்பமான சூப்பர் ஹீரோக்களை போல தனது சக்தியை தீய சக்தியை அழிக்க பயன்படுத்துகிறார்.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரை சேர்ந்த பாகிஸ்தானிய குடியேறியின் மகளான கமலா, மார்வெல் காமிக் புத்தகத்தில் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகவும் புகழ்பெற்றவராக உள்ளார்.

கமலா கான்

பட மூலாதாரம், Marvel Studios

இந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கிய ஜி. வில்லோ வின்சன், அமெரிக்காவில் பெண் அதுவும் இஸ்லாமிய பெண் குறித்தான கண்ணோட்டத்தை மாற்ற விரும்பியதாகத் தெரிவிக்கிறார்.

மார்வெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் பெண் முஸ்லிம் சூப்பர் ஹீரோ கமலா கான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் 2002ஆம் ஆண்டு X men கதாபாத்திரத்திற்கு புகழ்பெற்ற காமிக் புத்தகம் சூராயா காதிர் என்ற கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்திருந்தது. ஹிஜாப் அணிந்த ஆப்கானிஸ்தானில் பிறந்த பெண்ணாக வரும் சுராயா புகையாக மாறி காற்றில் மறைந்து போகும் திறனை கொண்டிருந்தார்.

பாலின பன்முகத்தன்மை

எட்டர்னல்ஸ்

பட மூலாதாரம், Marvel Studios

நவம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள மார்வெல்லின் `எடர்நல்` திரைப்படத்தில் பூமியை காக்கும் பத்து சிறப்பான கதாப்பாத்திரங்கள் உள்ளன.

அவர்கள் பூமியில் 35 ஆயிரம் வருடங்களாக வாழ்கின்றனர். அதில் ஒரு கதாபாத்திரம் அதாவது ஒரு சூப்பர் ஹீரோவான பாஸ்டோஸ் ஒருபால் உறவுக்காரர்.

மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் பாஸ்டோஸ் வெளிப்படையான ஒருபால் உறவுக்காரராக இருந்தாலும் LGBT குழுவை சார்ந்த பிற சூப்பர் ஹீரோக்களும் உள்ளனர்.

மார்வெல் காமிக் புத்த்கத்தில் வால்கிரி என்ற கதாபாத்திரம் உண்டு.

வால்கிரி இருபால் உறவுக்காரர். 2017ஆம் ஆண்டு Thor: Ragnarok திரைப்படத்தில் டெஸ்ஸா தாம்சன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிஜத்தில் அவர் இருபால் உறவுக்காரர் ஆவார்.

2017ஆம் ஆண்டு நடிகையும் பாடகியுமான பெக்கி ஜி ட்ரினி வெளிப்படையான ஒருபால் உறவுக்கார பவர் ரேஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல் டெட்பூல் கதாபாத்திரம் பன்முக பாலியல் விருப்பங்களை கொண்ட கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

மாற்றுத்திறன் சூப்பர் ஹீரோக்கள்

டேர்டெவில்

பட மூலாதாரம், Marvel Studios

அதேபோன்று மாற்றுத்திறன் சூப்பர் ஹீரோக்களும் உருவாக்கப்பட்டு வருகின்றனர். 1940களின் வெளியான Doctor Mid-Niteல் வெளியான பார்வை மாற்றுத் திறன் கதாபாத்திரம், 1950களில் சக்கர நாற்காலி பயன்படுத்தும் ப்ரஃபசர் எக்ஸ், ஆகிய கதாபாத்திரங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

மார்வெல் காமிக்ஸான டேர்டெவில் 2003ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டது அதன்பின் 2015ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் தொடராக வெளிவந்தது. அதில் மட் மர்டோக் கதாப்பாத்திரம் கதிர்வீச்சு பொருளால் பார்வையை இழந்துவிடுவார்.

அவரின் பார்வை போனதால் பிற புலன்கள் அதீதமாக செயல்படும் அதாவது ஒரு பார்வையுள்ள மனிதனுக்கு மேலான திறன் அவரிடம் இருக்கும்.

பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்கள்

2017ஆம் ஆண்டு இஸ்ரேல் நடிகை கேல் காடோட் நடித்த வொண்டர் வுமன் திரைப்படம் பெரிதும் பாரப்பட்டப்பட்டது. புறத்தோற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல் அந்த கதாபாத்திரம் மனதளவில் பலதரப்பட்ட உணர்ச்சிகளை கொண்ட வலுவான கதாபத்திரமாக வடிவமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரையும் பிறரையும் சேர்ந்தே காப்பாற்றும் திறன் கொண்டவராக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த மாதம் வொண்டர் வுமனின் 81ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக டிசி பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

வொண்டர் வுமன்

பட மூலாதாரம், Warner Bros

ஆனால் வொண்டர் வுமன் வடிமைக்கப்பட்ட 1941ஆம் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் முன்னதாக சூப்பர் கதாநாயகி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவரின் பெயர் மிஸ் ஃபரி, அவர் தனது அறிவுத் திறனால் எதிரிகளை வெல்வார்.

அந்த காலக்கட்டத்துக்கு மிகவும் நவீன சிந்தனையுடன் திகழ்ந்தார் மிஸ் ஃபிரி. எதிரிகளின் குழந்தைகளை தத்தெடுத்து, திருமணமாகாத தாயாக இருந்தார்.

இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த டார்பே மில்ஸ், முதலில் வேறு பெயரில் இதை எழுதினார். இம்மாதிரியான அருமையான ஒரு கதாபாத்திரம் பெண் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது என்பதை காட்டிக் கொள்ள தான் விரும்பவில்லை என அவர் நியூயார்க் போஸ்ட் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

கறுப்பின சூப்பர் ஹீரோ

சாட்விக் போஸ்

பட மூலாதாரம், Walt Disney Studios/ Marvel Studios

அதேபோன்று 2018ஆம் ஆண்டு ப்ளாக் பாந்தர் திரைப்படம் வெளியானபோது கறுப்பின சூப்பர் ஹீரோ மற்றும் அதில் நடிக்க கறுப்பின நடிகர் என்பது மார்வெல் ஸ்டூடியோஸுக்கு புதியது.

முதன்முறையாக சூப்பர் ஹீரோ திரைப்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. அதேபோன்று மேற்கத்திய ஆப்ரிக்க திரைப்படங்கள், வறுமையான ஆப்ரிக்காவை காட்டுவது போல அல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார பன்முகத்தன்மை நிறைந்த ஆப்ரிக்காவை ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் பார்த்தது சற்று புதுமையாக இருந்தது.

பிளாக் பாந்தரில் வாக்காந்தாவின் அரசராக தனது பூர்வீகத்திற்கு செல்வார் சாட்விக் போஸ்மேன். இதன் அடுத்த படம் 2022ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. ஆனால் அந்த துரதிஷ்டவசமாக போஸ்மேன் புற்றுநோயால் உயிரிழந்ததால் அவர் அதில் அவர் தோன்றமாட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :