பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஷிவானி நாராயணன்?

ஷிவானி நாராயணன்

பட மூலாதாரம், Twitter/Shivani Narayanan

படக்குறிப்பு, ஷிவானி நாராயணன்
    • எழுதியவர், எஸ்.வினோத் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இறுதிக் கட்டத்தை அடையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் நபர் ஷிவானி நாராயணன் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரத்துடன் ஆட்களை வெளியேற்றும் நடைமுறை முடிவடைகிறது.

அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இதுவரை 11 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 7 பேர் இருக்கின்றனர். 97 நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெற்றது. அதில் வீட்டிலிருக்கும் 7 பேரும் வெளியேற்றப்படுவோருக்கான பட்டியலில் இருக்கின்றனர்.

அடுத்தவாரம் இந்த சீசன் முடிவுக்கு வர உள்ள நிலையில் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக செல்வதற்கான 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் இந்த வாரம் முழுக்க நடைபெற்றது. இதில் வாரம் முழுவதும் போட்டியாளர்கள் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தினர்.

மொத்தம் 9 டாஸ்க்குகள் நடைபெற்றன. கடைசியில் கயிறு பிடிக்கும் சவாலும் நடந்தது.

ஷிவானி நாராயணன்

பட மூலாதாரம், Twitter/Shivani Narayanan

படக்குறிப்பு, ஷிவானி நாராயணன்

அதில் போட்டியாளர்கள் ஒரு மேடை மீது கயிற்றை இறுக்கமாக இரண்டு கைகளால் பிடிக்க வேண்டும் என கூறப்பட்டது. ஒரு கையை எடுத்தால் அவுட் என்பதுதான் போட்டி விதி. அதன்படி டாஸ்க் தொடங்கியது. ஆனால் விளையாட்டின் ஆரம்பத்திலேயே பாலாஜி ஒரு கையை எடுத்துவிட்டு மீண்டும் பிடித்தார்.

பின்னர் ஆரி காலை தூக்கி நிற்பதாக பாலாஜி கூறினார். அப்போது கடுப்பான ஆரி நீ செய்தது சரியா? ஏன் ஒரு கையை விட்டார். ஆரியின் குற்றச்சாட்டைக் கேட்டவுடன் முகம் சுருங்கிய பாலாஜி, கோபத்தில் கயிற்றை விட்டு விட்டு ஓரமாக சென்று அமைதியாக அமர்ந்துவிட்டார்.

பாலாஜியின் செயலால் அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். இதனைத் தொடர்ந்து சற்று நேரத்திலேயே ஆரியும் கயிறை விட்டுவிட்டார். பின்னர் ரியோ, சோம், கேபி அடுத்தடுத்து அவுட் ஆயினர். இறுதியாக ரம்யா மற்றும் ஷிவானி மிகவும் கடினமாக போராடி கயிற்றை பிடித்திருந்த நிலையில் திடீரென பின்னணியில் 'சிங்கப்பெண்ணே' பாடல் ஒலித்தது. இதனால் போட்டியாளர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள். உணர்ச்சிப்பெருக்கில் ஷிவானியும் ரம்யாவும் கண்கலங்கினர். இந்த டாஸ்க்கில் ஷிவானி வெற்றிப்பெற்றார்.

இதனை தொடர்ந்து 10 டாஸ்க்குகள் முடிந்த நிலையில் சோம் டிக்கேட் டூ ஃபினாலே டாஸ்க்கை வெற்றிப்பெற்று நேரடியாக இறுதிக்கட்டத்துக்கு செல்கிறார். நேற்றைய நிகழ்ச்சியின்போது கமல், சோமிற்கு வாழ்த்து கூறுகிறார்.

பின்பு பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் சோம் சேகரின் புகைப்படம் சிவப்பு துணியால் மூடப்பட்டுள்ளதை எடுக்குமாறு கமல் கூற, ரியோ அந்த திரைசீலையை நீக்க, வீட்டில் உள்ள அனைவரும் கைத்தட்டி சோமிற்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதையடுத்து சோமின் அம்மா வீடியோ காலில் சோமிடம் வாழ்த்து சொல்கிறார். அழாத மா என்று சொன்ன சோம், நெகிழ்ச்சியில் தானும் அழுகிறார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைந்த வாக்குகளை பெற்று ஷிவானி நாராயணன் வெளியேற்றப்பட்டார் என தகவல் வெளியாகிவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :