You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள்: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்
இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள். அவரைப் பற்றிய 10 சுவாரசியமான தகவல்களை தொகுத்து அளிக்கிறோம்.
- பாடல்களுக்கு உலக தர வரிசை பட்டியல் அளிக்கும் 'பில் போர்ட்ஸ்', கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த 'ரௌடி பேபி' பாடலுக்கு 4 ஆம் இடம் அளித்திருந்த்து.
- கடந்த 2019 ஆம் ஆண்டு 'யூடியுப்' வெளியிட்ட தரவரிசை பட்டியலில், 'ரௌடி பேபி' பாடல் வீடியோவுக்கு உலக அளவில் 7வது இடமும், இந்திய அளவில் முதல் இடமும் அளிக்கப்பட்டிருந்தது.
- 1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், யுவன் சங்கர் ராஜா.
- அரவிந்தன் திரைப்படத்திற்குதான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் 'டிரெய்லர்' வெளியிடப்பட்டது. அதற்கான இசையை தனது இவர் வடிவமைத்தார். அந்த படத்திற்கு ஒப்பந்தமான போது யுவன் சங்கர் ராஜாவுக்கு வயது 14.
- இசையமைப்பாளர், பாடகர் என்பதைத் தாண்டி 'பியார் பிரேமா காதல்', ' கொலையுதிர் காலம்' போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
- முறையான இசை வகுப்புகளுக்கு செல்லாதவர் யுவன் சங்கர் ராஜா, 35 வயதுக்குள் 100 படங்களுக்கு மேலாக இசையமைத்தவர்.
- தமிழகத்தில் கதாநாயகர்களுக்கு இணையான இளம் ரசிகர்கள் நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இவரது பிறந்த நாளுக்கு கட்டவுட்டுகள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.
- தனது தந்தையை விட தாய் மீது அதிக அளவிலான பாசம் கொண்டவராகவே யுவன் தன்னை வெளிப்படுத்துபவர். தனது தாய் பிறந்த தினத்திலேயே தனது மகள் 'ஜியா' பிறந்ததை பெருமையாக நண்பர்களிடம் பேசுவார்.
- நா.முத்துக்குமார் மீது அளவு கடந்த பாசமிக்கவராக இருந்த இவர், தனது அலுவலகத்தில் முத்துக்குமாருக்கேன்றே தனி அறையும் ஒதுக்கியிருந்தார்.
- 2006ஆம் ஆண்டு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார் யுவன். 2004ஆம் ஆண்டில் '7ஜி ரெயின்போ காலனி' படத்திற்காக பிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் யுவன்.
பிற செய்திகள்:
- தாலிபன்களிடம் சிக்கிய போர் விமானங்கள்: அதிநவீன ஆயுதங்களை இயக்க தெரியுமா?
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: