இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்: “எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் வதந்தி பரப்புகிறது”

"எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் வதந்தி பரப்புகிறது" - மனம் திறந்த ஏ.ஆர். ரகுமான்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்துஸ்தான் டைம்ஸ்: எனக்கு எதிராக ஒரு குழு வதந்தி பரப்புகிறது- ஏ.ஆர்.ரகுமான்

பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு குழு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், ஹிந்தி சினிமாக்களில் தனக்கு பணியாற்றும் வாய்ப்புகளை அந்த குழு தடுத்து வருவதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குற்றஞ்சாட்டியுள்ளார் என தி இந்துஸ்தான டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்

பட மூலாதாரம், Getty Images

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஒரு வானொலிக்கு ஏ.ஆர்.ரகுமான் பேட்டியளித்தபோது, தமிழ் சினிமாவை விட, ஹிந்தி சினிமாவில் ஏன் குறைவான படங்களே உங்களுக்கு இசையமைக்கக் கிடைக்கிறது என கேட்டபோது,’’ ஒரு குழு எனக்கு எதிராக வதந்தி பரப்பி வருகிறது. அதனால், ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களே இதற்கு காரணம் என நினைக்கிறேன்’’ என ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

உங்களிடம் போக வேண்டாம்

'தில்பெசாரா' படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், 'பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள்.

அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்' என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று

அவர், "பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்." - இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Presentational grey line

இ இந்து: அதிக விலைக்கு விற்கப்படும் கொரோனா மருந்துகள்

ரெம்டெசிவிர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரெம்டெசிவிர்

மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் ( tocilizumab) போன்ற மருந்துகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை எனத் தனியார் மருத்துவமனைகள் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாகச் சென்னைக்கு வெளியே தமிழகத்தின் பிற மாவட்டங்களில், குறைந்த எண்ணிக்கையிலான மருந்துகளே சந்தையில் இருப்பதாகவும், இதனால் வணிகர்கள் இதை அதிக விலைக்கு விற்றுவருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்துகள் கிடைத்தாலும், தனியார் மருத்துவமனைகளுக்குக் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்றும், 5000 ரூபாய் விலை மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து சில வணிகர்களால் 20,000 முதல் 25,000 ரூபாய் விற்கப்படுவதாக இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழக கிளை தலைவர் சி.என் ராஜா கூறியுள்ளார்.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் (டி.என்.எம்.எஸ்.சி) இதுவரை 1,02,500 குப்பிகளை ரெமெடிசிவிர் மற்றும் 6,500 குப்பிகளை டோசிலிசுமாப் மருந்துகளை வாங்கியுள்ளது. அவற்றை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு 130 குப்பி ரெமெடிசிவிர் மற்றும் டோசிலிசுமாப் மருத்துகளை வழங்கியுள்ளதாகத் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Presentational grey line

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

தினத்தந்தி: கொரோனா பரிசோதனை வெறும் 400 ரூபாய்க்குச் செய்யலாம்

இந்த கருவி மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த கருவி மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.

மிகவும் குறைவான விலையில் வேகமான கொரோனா பரிசோதனைக்கு நவீன கருவி ஒன்றை மேற்கு வங்கத்தில் உள்ள காரக்பூர் ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது. இந்த கருவி மூலம் ரூ.400-க்கும் குறைவான கட்டணத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தனித்துவம் மிக்க இந்த சிறிய கையடக்க கருவியால் வேகமாகவும், துல்லியமாகவும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள முடிகிறது. இதற்கு என ஆய்வகங்களோ, ஆர்.டி-பி.சி.ஆர் போன்ற பரிசோதனை கருவிகளோ தேவையில்லை.

இதைப்போல வெறும் காகித துண்டுகளை மாற்றி மாற்றியே இந்த கருவி மூலம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மிகவும் மலிவான விலையில் மேற்கொள்ள முடியும். அந்தவகையில் ஒருவருக்கு ரூ.400-க்கும் குறைவான கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகளைப்போல மிகவும் துல்லியமான முடிவுகளை இந்த கருவி வழங்குகிறது. இந்த கருவி மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திறன் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த கருவியின் பரிசோதனை நடவடிக்கைகளை ஆய்வாளர் குழுவினர் துல்லியமாக மதிப்பிட்டு உள்ளனர். அந்தவகையில் ஒரு மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளை வழங்கி விடுகிறது.

இந்த கருவிகளைக் கணிசமான எண்ணிக்கையில் உருவாக்க காரக்பூர் ஐ.ஐ.டி.யால் முடியும் எனவும், எனினும் காப்புரிமை உரிமம் கிடைத்தால் இதுபோன்ற கருவிகளை வர்த்தக நோக்கத்தில் தயாரிக்க முடியும் என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :