You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்கள் - சமூக ஊடகத்தை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள்
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனா தொடர்பாக உருவாக்கியுள்ள விழிப்புணர்வு பாடல்களுள் சிலவற்றை பார்க்கலாம்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கொரோனா குறித்த பாடலொன்றை பாடியிருக்கிறார். ''அணுவை விடவும் சிறியது.. அணுகுண்டை விடவும் கொடியது'' எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு அவரே மெட்டமைத்து பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருக்கிறார். தமிழில் வைரமுத்துவைப் போன்று தெலுங்கில் வெண்ணிலகண்டி மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் காய்கனி ஆகியோர் கொரோனா குறித்து எழுதிய பாடல்களையும் அந்தந்த மொழிகளிலேயே பாடி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
''இது என்ன உலகமடா.. கண்ணு கலங்குதடா'' எனத் தொடங்கும் உருக்கமான பாடல் ஒன்றை பாடகர் வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை பாடலாசிரியர் சிற்றரசு எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை வேல்முருகன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
''உன்னை காக்கும் நேரமிது.. உன் உயிரை காக்கும் நேரமிது'' எனத் தொடங்கும் பாடலை இயக்குநர் சீனு ராமசாமி எழுதியிருக்கிறார். அந்தப் பாடலை செந்தில்தாஸ் பாடியிருக்கிறார். என்.ஆர். ரகுநாதன் அந்தப் பாடலுக்கு இசையமைத்துக்கிறார்.
''என்னங்க நடக்குது நாட்டுல'' என்கிற பாடலை கானா மணி எழுதியிருக்கிறார். அந்தப் பாடலை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பாடி இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை சாண்டி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
''கவலையும் வேண்டாம்.. கலங்கவும் வேண்டாம்'' எனத் தொடங்கும் கொரோனா விழிப்புணர்வு பாடலை பின்னணி பாடகி ரம்யா துரைச்சாமி உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி எழுதி, இசையமைத்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். 'கொரோனா வைரஸே உன் அழிவை எதிர்பார்த்து நம்ம வேர்ல்டும் வெய்டிங்கே' என அந்தப் பாடல் ஆரம்பிக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக பின்பற்றாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு அறிவுரை கூறும்படி நகைச்சுவை நடிகர் மனோபாலாவுடன் இணைந்து ஒரு குட்டிக் கதையும் இந்தப் பாடலின் தொடக்கத்தில் வருகின்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: