அர்னாப் கோஸ்வாமியிடம் விமானத்தில் கேள்வி கேட்ட குணால் கம்ரா - டிரெண்ட் ஆகும் ஹாஷ்டேக்

பிரபல ஊடகவியலாளரும் வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியிடம் விமானத்தில் கேள்வி கேட்டதற்காக 6 மாதம் இண்டிகோ விமானம் மற்றும் ஏர் இந்தியா ஆகிய விமானங்களில் பயணிக்க பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ராவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அர்னாப் கோஸ்வாமியிடம் விமானத்தில் கேள்வி கேட்டதற்காக மறு அறிவிப்பு வெளியிடும்வரை தங்களின் விமானங்களில் குணால் கம்ரா பயணிக்க தடைவிதித்து ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, நடுவானில் 'ரிபப்ளிக் டிவி' இணை நிறுவனரும், வலதுசாரி ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமியை சந்தித்தது குறித்து ட்விட்டரில் பகிர்ந்த காணொளியும் அதனை ஒட்டி எழுந்துள்ள விவாதங்களும் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி உள்ளன.

நான் இதை ரோஹித்திற்காக செய்கிறேன் என்று தலைப்பிட்டு அந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.

குணால் கம்ரா வெளியிட்டுள்ள காணொளியில், "Arnab, India wants to know, நீங்கள் கோழையா அல்லது தேசியவாதியா? எனக் கேள்வி எழுப்புகிறார்"

அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார்.

இதனை அடுத்து Arnab, boycott indigo மற்றும் kunalkamra ஆகிய ஹாஷ்டேகுகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி உள்ளன.

இந்த kunalkamra என்ற ஹாஷ்டேகின் கீழ் குணால் கம்ராவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதியப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: