ரஜினிகாந்த் - சிவா கூட்டணி உறுதியானது: அஜித்தை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறார் சிவா - அதிகாரபூர்வ அறிவிப்பு 

ரஜினிகாந்த் - சிவா கூட்டணி

பட மூலாதாரம், Getty Images/wiki

நடிகர் ரஜினிகாந்தின் 168 -வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் சிவா. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித்துடன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து நான்கு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சிவா. 

இந்த ஆண்டு ஒரே நாளில் துவக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அஜித் நடித்த இரு படங்கள் ஒன்றாக வெளியாயின. பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரு திரைப்படங்களும் ஒன்றாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. விஸ்வாசம் திரைப்படத்தை இயக்கியவர் சிவா என்பது குறிப்பிடத்தக்கது 

யார் இந்த இயக்குநர் சிவா?

ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்வை தொடங்கியவர் சிவா. கடந்த 2002-ம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 

அதன் பின்னர் தொடர்ந்து டோலிவுட்டில் கோலோச்சினார். 2008-ம் ஆண்டு சௌர்யம் என்ற பெயரில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கினார்

அதற்கு அடுத்த ஆண்டே, செங்கம் என்ற பெயரில் கோபிசந்த், திரிஷா நடிப்பில் ஒரு திரைப்படத்தையும் இயக்கினார். 

கடந்த 2011-ம் ஆண்டு தமிழில் இயக்குநராக சிவா அறிமுகமானார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படம்தான் தமிழில் சிவா இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம். இந்த படம் வெற்றியடைந்ததையடுத்து சிறுத்தை 'சிவா' என்று சினிமா ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்பட்டார். 

பின்னர் மீண்டும் ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்கியபின்னர் நடிகர் அஜித்துடன் சேர்ந்தார். 2014-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வீரம் வெளியானது. அதற்கடுத்த ஆண்டே வேதாளம் திரைப்படமும் வெளியானது. 

இவ்விருவர் கூட்டணியில் 2017-ல் பெரும் பொருட்செலவில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த விவேகம் ரிலீசானது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சிவா - அஜித் கூட்டணியில் விஸ்வாசம் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இயக்குநர் சிவா

பட மூலாதாரம், Imdb

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து தொடர்ச்சியாக நான்கு திரைப்படங்கள் எடுத்தவர் என்ற பெருமை சிவாவைச் சேரும். 

ரஜினியின் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது தர்பார் திரைப்படம் தயாராகிவருகிறது. இதையடுத்து சிவாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த்.

இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

''எந்திரன், பேட்டை என்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ரஜினிகாந்த் இணைகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார்'' என இன்று (வெள்ளிக்கிழமை) சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. 

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :