பிக்பாஸ் 3: ஒரு லட்சம் ட்வீட்டுகள் - ட்விட்டரை அதிர வைத்த கவின் லொஸ்லியா ஆர்மி

இன்னும் சற்று நேரத்தில் தமிழ் பிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் யார் என்பது ஒளிபரப்பாகிவிடும். ஆனால், அதற்கு முன்பே நேரடியாக நிகழ்ச்சியை பார்த்தவர்கள் முகேன்தான் டைட்டில் வின்னர் என்றும் இரண்டாமிடம் சாண்டிக்கு என்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிர்கின்றனர்.

மூன்றாவது இடம் லொஸ்லியாவுக்கென்றும், நான்காவது இடம் ஷெரீனுக்கென்றும் அந்த ட்வீட்டுகள் கூறுகின்றன.

"என்ன லொஸ்லியா வின்னர் இல்லையா?" - பிக்பாஸ் விருது தராவிட்டாலும் எங்கள் மனதை வென்றவர் லொஸ்லியாவும், கவினும் என்றுதான் அவர்களது ஆர்மி களத்தில் குதித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. சென்னை அளவில் இதனையெல்லாம் பின் தள்ளிவிட்டு ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்கில் #PeoplesFavouriteKaviliya என்ற ஹாஷ்டேக்தான் உள்ளது.

இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்டுகள் இந்த ஹாஷ்டேகில் பகிரப்பட்டுள்ளன.

கவினும் லொஸ்லியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட அன்பை சில ட்வீட்டுகள் சிலாகிக்கின்றன.

லொஸ்லியா என்பது ஒரு வார்த்தை அல்ல, அது ஒரு எமோஷன் என உணர்வுப்பூர்வமாக லியாவை கொண்டாடுகிறது ஒரு ட்வீட்.

பிக்பாஸ் வீட்டில் கேமிரா முன் நடிக்காதவர்கள் கவினும், லியாவும்தான் என்கிறது ஒரு ட்வீட். "அவர்கள் போலியாக ஒரு போதும் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு உண்மையாக இருந்தார்கள்" என்கிறது அந்த ட்வீட்.

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லொஸ்லியா தந்தை அவரை கண்டித்த போது, லொஸ்லியாவுக்கு எதிர்ப்பு வந்தது. அதே நேரம், லொஸ்லியா, கவின் காதலை ஏன் எதிர்க்கிறீர்கள் என அவருக்கு ஆதரவாகவும் கருத்து பதிந்திருந்தனர்.

இப்பிக்பாஸில் அதிகமுறை ட்ரெண்டான ஒருவர் உண்டெங்கில் அது கவிந்தான் சாரே என்று சொல்லும் வண்ணம் இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதிகமுறை ட்ரெண்ட் ஆனது கவின் தான்.

இந்த வாரம் வெளியேற்றிவிடுவார்கள். அடுத்த வாரம் வெளியேற்றிவிடுவார்கள் என பலர் முணுமுணுக்க "எனக்கு எண்ட் கார்டை நானே போட்டுக்கொண்டால்தான் உண்டு" என்று அவரேதான் வெளியேறினாரே தவிர அவரை பிக்பாஸ் வீட்டில் உள்ள யாராலும் வெளியேற்ற முடியவில்லை.

இலங்கையில் இருந்து BIGG BOSS 3 நிகழ்ச்சிக்கு லொஸ்சியா சென்றது எப்படி என்று காண:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :