நரேந்திர மோதி வாழ்க்கை குறித்த சினிமா நாளை வெளியாகாது

இந்திய மக்களவை தேர்தலும் பாலிவுட் திரையுலகமும்

பட மூலாதாரம், TWITTER / VIVEK ANAND OBEROI

பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமான 'PM Narendra Modi' திரைப்படம் நாளை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது அந்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியான போது, இது ஒரு பிரச்சார யுக்தி என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன. இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. இப்படத்தில் பிரதமர் மோதியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அரசியலுக்கும் இப்படத்திற்கும் தொடர்பில்லை என்றும், சொந்தப் பணத்திலேயே இப்படம் தயாரிக்கப்பட்டதாகவும் அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி இப்படம் வெளியாகாது என்றும் எப்போது வெளியாகும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படத்தின் இயக்குநர் ஒமுங் குமார் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்திய மக்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மோதி ஒரு சிறந்த மனிதர் என்றும் அதனை மக்களுக்கு கூறவே இந்த படத்தை எடுத்ததாகவும் இதன் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் சந்தீப் சிங் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

"அரசியல் அல்லது அரசியல்வாதிகள் அல்லது எந்த கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எதிர்க்கட்சிகள் இந்த படம் குறித்து அச்சப்பட்டால், தங்கள் தேசத்திற்கும், அந்தந்த மாநிலங்களுக்கும் அவர்கள் செய்தது பற்றி அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்று பிபிசியிடம் பேசியபோது சந்தீப் கேள்வி எழுப்பினார்.

'PM Narendra Modi' திரைப்படம் தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்டால், அது வாக்காளர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சர்ச்சை இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :