ஸ்டுடியோ சென்று புகைப்படமெடுத்த காலத்தை நினைவூட்டும் புகைப்படங்கள்

பட மூலாதாரம், KETAKI SHETH/PHOTOINK
விருது பெற்ற புகைப்பட கலைஞரான கேடாக்கி சேட் மேற்கு மராட்டியத்தில் உள்ள மனோரி கடற்கரை கிராமத்தில் உள்ள ஜெக்தீஷ் ஃபோட்டோ ஸ்டுடியோவுக்கு வருபவர்களை புகைப்படம் எடுக்க முடிவு செய்தார்.
ஒரு வித்தியாச முயற்சிதான் இது. இன்று புகைப்படம் எடுத்து கொள்வதற்காக ஸ்டுடியோவுக்கு வருபவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், பலதரபட்ட மக்களின் வித்தியாச முகங்களை பதிவு செய்வதுதான் நோக்கம்.
அவர் ஏறத்தாழ ஆறு மாதங்கள் வார விடுமுறைன் நாட்களை வாரங்கள் ஜெக்தீஷ் ஃபோட்டோ ஸ்டுடியோவில் கழித்தார். அங்கு பல்வேறு மக்களின் முகங்களை படம்பிடித்த பின், 2015 ஆம் ஆண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, பல்வேறு ஸ்டுடியோக்களுக்கு சென்று படம் பிடித்தார்.
எட்டு மாநிலங்களில் உள்ள 60 ஸ்டுடியோக்களுக்கு சென்று புகைப்படம் எடுத்ததாக கூறுகிறார்.
சிலருக்கு புகைப்படம் எடுத்துக் கொள்வது பிடித்தமான விஷயமாக இருக்கிறது. சிலர் அவ்வாறான ஒரு புகைப்பட கருவியை, அதன் ஷட்டர் ஒலியை வரவேற்பதில்லை என்கிறார்.
அதற்கு உதாரணமாக ஒரே ஃப்ரேமில் எடுக்கப்பட்ட இரட்டையர்களின் புகைப்படத்தை காட்டுகிறார். ஒரு குழந்தை உற்சாகமாக புகைப்படத்திற்கு போஸ் தர, மற்றொரு குழந்தை அழதப்படி நிற்கிறது.

பட மூலாதாரம், KETAKI SHETH/PHOTOINK
இந்த புகைப்படங்கள் அனைத்தையும் புத்தகமாக தொகுத்து இருக்கிறார்.
என்னிடம் நல்ல படங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் வந்த பின்தான், இதனை புத்தகமாக தொகுக்கும் எண்ணம் வந்தது என்கிறார்.

பட மூலாதாரம், KETAKI SHETH/PHOTOINK
காணாமல் போகும் ஸ்டுடியோக்கள்
இந்த ஸ்மார்ட்போன் காலத்திலும் சில ஸ்டுடியோக்கள் துடிப்புடன் இயங்குகின்றன. பல தன் பொலிவை இழந்துவிட்டன. சாலையில் நடந்து செல்பவர்களை அழைத்து புகைப்படம் எடுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன என்கிறார்.

பட மூலாதாரம், KETAKI SHETH/PHOTOINK
டிஜிட்டல் கேமராக்கள் மீது தொடக்கத்தில் பெரிய நாட்டம் ஏதும் இல்லை என்கிறார். 2013 ஆம் ஆண்டுதான் முதல்முறையாக டிஜிட்டல் கேமராக்கள் வாங்கியதாக சொல்கிறார்.

பட மூலாதாரம், KETAKI SHETH/PHOTOINK

பட மூலாதாரம், KETAKI SHETH/PHOTOINK
அவர் எடுத்த புகைப்படங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
பிற செய்திகள்:
- "டிரம்ப் சொன்னதால்தான் ராஜிநாமா செய்தேன்"- பதவி விலகிய அமெரிக்க அட்டார்னி ஜெனரல்
- டிரம்ப் மீதான நம்பிக்கையை அமெரிக்க இளைஞர்கள் இழக்கிறார்களா?
- பண மதிப்பிழப்பு: 'ஒரு தரைவிரிப்பு குண்டுவீச்சு'
- சர்ச்சையை ஏற்படுத்திய சிறிசேனவின் பேச்சு: ''பட்டாம்பூச்சி'' கதைக்கு அர்த்தமென்ன?
- "நாட்டைவிட்டு வெளியேறுங்கள்" - பேட்டிங்கை விமர்சித்த ரசிகரை சாடிய விராட் கோலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












