21வது வார புகைப்படப் போட்டிக்கான தலைப்பு இதோ #BBCTamilPhotoContest

பிபிசி தமிழின் புகைப்படப் போட்டியில் பங்கேற்க ஆர்வமா? #BBCTamilPhotoContest

பட மூலாதாரம், Getty Images

வணக்கம் நேயர்களே!

ஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில் புகைப்படத்துக்கான தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் புகைப்படத்தை அனுப்பிவைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழ் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.

தலைப்புக்கு தகுந்த புகைப்படங்ளை எடுத்து அனுப்ப வேண்டும். ஒருவர் தான் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவேண்டும்.

மின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, சமூக வலைத்தள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.

பிபிசி தமிழின் புகைப்படப் போட்டியில் பங்கேற்க ஆர்வமா? #BBCTamilPhotoContest

பட மூலாதாரம், Getty Images

புகைப்படங்களை கேமரா மூலம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது அவசியம்.

மற்றவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.

மேலும், புகைப்படத்தில் இடம்பெறும் மூன்றாம் நபர்களின் அனுமதியை பெற்று படங்களை எடுக்க வேண்டும்.

புகைப்படங்களை அனுப்பும்போது 'வாட்டர் மார்க்' அல்லது உங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் இல்லாமல் அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து மேலதிக தகவலை தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் இணையதளம், பிபிசி தமிழ் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்த வாரத் தலைப்பு

21வது வார புகைப்படப் போட்டிக்கான கரு: 'மலர்கள்'

மலர்கள் என்றாலே அழகுதான். நீங்கள் எடுக்கும் புகைப்படம் மலர்களை மையமாக கொண்டிருக்க வேண்டும்.

மின்னஞ்சல் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: bbctamizhosai@gmail.com

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: