சினிமா விமர்சனம்: அன்னாபெல் கிரியேஷன்

பட மூலாதாரம், ANNABELLE: CREATION
2014ல் வெளிவந்த அன்னாபெல் படத்திற்கு முன்பாக என்ன நடந்தது என்பதைச் சொல்லும் படம் இது. அதாவது அதன் prequel. தி கான்ஜூரிங் பட வரிசையில் நான்காவது படம் இது. பலவகையில் முதல் பாகத்தைவிட மேம்பட்ட படம்.
1943 பொம்மை தயாரிப்பவரான சாமூவேல் மல்லின்ஸ் - எஸ்தர் தம்பதியின் ஐந்து வயது மகளான அன்னாபெல் அடையாளம் தெரியாத ஒரு கார் மோதி இறந்து போகிறாள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மூடப்பட்ட ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சகோதரி சார்லட்டும் ஆதரவற்ற ஆறு குழந்தைகளும் மல்லின்ஸின் வீட்டில் வந்து வசிக்க ஆரம்பிக்கிறார்கள்.
அதில் ஜானிஸ் என்ற குழந்தை, திறக்கக்கூடாத கதவைத் திறந்து ஒரு அறைக்குள் செல்ல அங்கு ஆனபெல்லின் ஆவி வடிவத்தில் இருக்கும் சாத்தான் ஜானிஸை குறிவைக்க ஆரம்பிக்கிறது. பிறகு சாமூவேல் மல்லின்ஸ் தம்பதி கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். சகோதரி சார்லெட்டும் குழந்தைகளும் அங்கிருந்து தப்பினார்களா, அன்னாபெல்லின் ஆவி ஏன் பெற்றோரையே கொல்கிறது என்பதுதான் கதை. படம் நிறைவடையும்போது, அன்னாபெல் படத்தின் முதல் காட்சியில் நிறைவடைகிறது.

பட மூலாதாரம், ANNABELLE: CREATION
சமீப காலங்களில் ஹாலிவுட்டில் வெளிவந்த பேய்ப் படங்களில் தி கான்ஜூரிங் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெளிவந்த தி கான்ஜூரிங் - 2, ஆனபெல் ஆகிய படங்கள் முதல் படம் அளவுக்குப் பேசப்படவில்லை. ஆனால், இந்தப் படம் அட்டகாசமான ஒரு திகில் திரைப்படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
நகர்ப்புறங்களைவிட்டு தூரத்தில் ஒரு பெரிய வீடு. பேய் வசிப்பதற்கென்றே கட்டப்பட்டதைப்போல ஒரு ஷெட். பயமுறுத்தும் ஒரு பொம்மை. பாழடைந்த கிணறு - இத்தனையும் படத்தில் வந்துவிட்ட பிறகு, படம் பார்ப்பவர்களுக்கு நடுக்கம் தானாக வந்துவிடுகிறது.

பட மூலாதாரம், ANNABELLE: CREATION
ரொம்பவும் நிதானமாக ஆரம்பிக்கும் படம், மெதுமெதுவாக திகிலை அறிமுகப்படுத்துகிறது. அதன் உச்சகட்டத்தில் ரசிகர்கள் நடுங்கிப்போகிறார்கள். குறிப்பாக, மல்லின்ஸ் தம்பதிகள் கொலைசெய்யப்படும் காட்சி.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
40களிலும் 50களிலும் படம் நடப்பதால், அதற்கேற்ற வண்ணத்தில் படம் உருவாகியிருப்பது படத்திற்குக் கூடுதல் நம்பகத்தன்மையை அளிக்கிறது. இந்த நம்பகத்தன்மை, படத்தில் இடம்பெறும் சம்பவங்களுக்கும் கிடைப்பதால் இன்னும் அச்சமாக இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவு, இசை ஆகியவை இந்தப் படத்தின் கூடுதல் பலங்கள். அன்னாபெல் படத்தின் முதல் பாகம் சிலருக்கு ஏமாற்றமளித்திருக்கலாம். ஆனால், இந்த பாகம் அப்படியிருக்காது.
தி கான்ஜூரின் தொடரின் அடுத்த படத்தை எதிர்பார்க்க வைக்கிறது அன்னாபெல் - 2.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












