ஐபிஎல் 2023: தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட இல்லாத சிஎஸ்கே

Dhoni at IPL

பட மூலாதாரம், BBCI/IPL

மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மாவும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேலும் இருக்கும் ஐபிஎல் தொடரில், 15 ஆண்டுகள் ஆன பின்னரும் சென்னை அணிக்கு மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் முன்னிலைப்படுத்தபடுவதில்லை.

2023ஆம் ஆண்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த யாருமே இல்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ஐபிஎல் 'மினி' ஏலம்

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 16வது ஐபிஎல் தொடருக்கான 'மினி' ஏலம் சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக புதிதாக 7 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு சென்னைக்காக ஆடிய 18 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதையடுத்து 16வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் 25 வீரர்கள் அடங்கிய பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி செய்தது.

தோனி தலைமையிலான இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி உள்ளிட்ட 8 வெளிநாட்டு வீரர்களும், 17 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

2023ஆம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வோர் அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் எடுத்து முடித்துள்ளன. இந்நிலையில், 25 பேர் அடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் கூட இடம்பெறவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தங்கராசு நடராஜன், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் என யாருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏன் ஏலம் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

ஏலத்தில் என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் இந்த ஆண்டு தக்கவைக்கவில்லை.

மாறாக சமீபத்தில் நடந்த ஏலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான ஜெகதீசனை மட்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது சென்னை அணி. கொல்கத்தா அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே ஜெகதீசன் நாராயணை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவிய நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி ஜெகதீசனை 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.சென்னை அணி தனது கையிருப்பில் இன்னும் 1.5 கோடி ரூபாய் மீதம் வைத்திருக்கும் நிலையில், ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க 85 லட்சம் வரை கேட்டது.

சென்னை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனி விளையாடும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரான ஜெகதீசனை கடந்த ஆண்டு வரை சென்னை அணி விளையாட வாய்ப்பு வழங்காமல் பென்ச்சில் அமர வைத்து இருந்தது.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெகதீசனைத் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த வேறு எந்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவில்லை.

"ஐபிஎல் என்பது பொழுதுபோக்கை மையப்படுத்தி நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் போட்டி. அதனால் சென்னைக்கு அணிக்கோ, வேறு எந்த அணிக்கோ ஒரு மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை" என்கிறார், சென்னையை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகருமான செல்வ முத்துகுமார். ஆனால் சென்னை அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களை பெயரளவில் கூட எடுக்காமல் இருப்பது இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தவறான முன்னுதாரணமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Selva Muthukumar
படக்குறிப்பு, செல்வ முத்துகுமார்

இந்த ஆண்டு விளையாடும் தமிழக வீரர்கள் யார்?

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இல்லை என்றாலும், வேறு சில அணிகள் தமிழக வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் அணி

  • விஜய் சங்கர்
  • சாய் கிஷோர்
  • சாய் சுதர்ஷன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • ஜெகதீசன் நாராயண்
  • வருண் சக்ரவர்த்தி

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • முருகன் அஸ்வின்
  • ரவிச்சந்திரன் அஸ்வின்

சன் ரைசர்ஸ் ஐதராபாத்

  • தங்கராசு நடராஜன்
  • வாஷிங்டன் சுந்தர்

பஞ்சாப் கிங்ஸ்

  • ஷாருக் கான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ

  • தினேஷ் கார்த்திக்

காணொளிக் குறிப்பு, குஜராத் கிராமத்தில் நாள்தோறும் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: