'தி கேரளா ஸ்டோரி' படத்தால் அதா ஷர்மாவுக்கு பிரபலம் - ஆனால் அவரை பற்றி எந்த அளவுக்கு தெரியும்?

பட மூலாதாரம், adah_ki_adah Instagram
- எழுதியவர், மது பால்
- பதவி, பிபிசி இந்திக்காக, மும்பையிலிருந்து
மே 5ஆம் தேதி வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே இவர் தலைப்புச்செய்திகளில் உள்ளார்.
இப்படம் வெளியான உடனேயே பல சர்ச்சைகளை கிளப்பியது. இந்த சர்ச்சைகளுக்கு மிகப்பெரிய காரணம் படத்தின் கதை.
இயக்குநர் சுதிப்தோ சென்னின் இந்தப் படம், கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் மதம் மாற்றப்பட்டு சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கதையை சொல்கிறது.
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் இது ஒரு உண்மை சம்பவத்தால் ஊக்கம் பெற்ற கதை என்று சொல்கிறார்கள்.
'தி கேரளா ஸ்டோரி' பற்றி தேர்தல் கூட்டங்களில் விவாதிக்கத் தொடங்கியபோது சர்ச்சை மேலும் அதிகரித்தது.
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் படம் தடை செய்யப்பட்டது. ஆனால் இந்தத்தடையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
இந்தப் படம் தமிழகத்தில் பல திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. கேரளாவிலும் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
அதா ஷர்மா யார்?
'தி கேரளா ஸ்டோரி' படத்தின் விவாதங்களுக்கு மத்தியில் நடிகை அதா ஷர்மாவும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
படத்தின் கதை மூன்று பெண்களை சுற்றி நடக்கிறது.
இதில் நடிகை அதா ஷர்மா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
அதா ஷர்மா பல ஆண்டுகளாக நடித்து வருகிறார், ஆனால் அவருக்கு இதுவரை இவ்வளவு பிரபலம் கிடைக்கவில்லை.
31 வயதான அதா மும்பையில் வளர்ந்தவர். அவர் தமிழ் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்.
12வது படித்துவிட்டு, மாடலிங்கில் அடியெடுத்து வைத்த அதா ஷர்மா, ஜிம்னாஸ்ட் ஆவதற்கு பயிற்சியும் எடுத்தார்.

பட மூலாதாரம், THE KERALA STORY
திரைப்பட வாழ்க்கை
அவர் கதக் நடனம் மற்றும் சால்சா நடனமும் கற்றுள்ளார்.
அவரது திரையுலக வாழ்க்கை அவ்வளவு சுலபமாக இல்லை. பாலிவுட்டில் இடத்தைப் பிடிக்கும் முன், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றினார்.
பாலிவுட் படங்களில் அவரது பயணம் இயக்குனர்- தயாரிப்பாளர் விக்ரம் பட்டின் 2008 திரைப்படமான '1920' உடன் தொடங்கியது.
'கமாண்டோ 2', 'கமாண்டோ 3' மற்றும் 'ஹஸி தோ ஃபஸி' போன்ற படங்களில் அதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தென்னிந்திய படங்களில் அவருக்கு கிடைத்த புகழ் இந்தி படங்களில் கிடைக்கவில்லை.
அதா ஷர்மா 'புகார்', 'தி ஹாலிடே', 'பதி பத்னி அவுர் பங்கா', 'ஐசா வைசா ப்யார்' போன்ற சில வெப் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

பட மூலாதாரம், THE KERALA STORY
அதா ஷர்மா தனது பெயரை மாற்றிக்கொண்டது ஏன்?
அதா, 15 ஆண்டுகளாக பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியான பிறகு இருக்கும் அளவுக்கு அவர் பற்றி இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை.
இந்த நாட்களில் அவரது படமும் அவரும் லைம்லைட்டில் உள்ளனர்.
தனது உண்மையான பெயர் அதா ஷர்மா அல்ல என்றும், படங்களுக்காக இந்தப்பெயரை வைத்துக்கொண்டுள்ளதாகவும், சமீபத்தில் அதா ஷர்மா தெரிவித்தார்.
ஒரு யூடியூபருக்கு அளித்த பேட்டியில், தனது உண்மையான பெயர் சாமுண்டேஸ்வரி ஐயர் என்று அவர் கூறினார்.
பேச்சு வழக்கில் இது சற்று கடினமான பெயர் என்பதால் தனது பெயரை மாற்ற முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TWITTER/ADAH SHARMA
15 வருட வாழ்க்கையில் முதல்முறையாக சர்ச்சை
அதா ஷர்மாவை இன்ஸ்டாகிராமில் 73 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
அவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த வீடியோக்களில் கிளாசிக்கல் நடனம் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வரை தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனியாக பயணம் செய்வது பற்றி பேசுகிறார். மேலும் தனது பாட்டியுடன் பல சுவாரஸ்யமான வீடியோக்களையும் உருவாக்கியுள்ளார்.
அதா தனது தனிப்பட்ட வாழ்க்கை அல்லது திரைப்பட வாழ்க்கை தொடர்பாக இதுவரை இந்த அளவிற்கு தலைப்புச் செய்திகளில் இருந்ததில்லை.
அவர் குறித்து எந்த சர்ச்சையும் எழுந்ததில்லை.
ஆனால் 'தி கேரளா ஸ்டோரி' அவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை கொண்டு வந்துள்ளது.
இவரை மக்கள் அறிந்து கொண்டது மட்டுமின்றி, அவரைப் பற்றி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.

பட மூலாதாரம், TWITTER/ADAH SHARMA
சமீபத்தில் ஏற்பட்ட விபத்து
அதா ஷர்மா இந்த நாட்களில் தனது படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருக்கிறார்.
படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மற்றும் அதா ஷர்மா இருவரும் பல இடங்களுக்கு சென்று தங்கள் படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள கரீம்நகருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அவர்கள் சென்று கொண்டிருந்தனர். ஆனால் வழியில் கார் விபத்துக்குள்ளானது.
இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"நாங்கள் ஒரு நிகழ்வில் எங்கள் படத்தைப் பற்றி பேச கரீம்நகர் சென்றுகொண்டிருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எமெர்ஜென்ஸி உடல்நிலை காரணமாக எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. கரீம்நகர் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நம் பெண் குழந்தைகளை காப்பாற்றவே இந்த படத்தை தயாரித்துள்ளோம். எனவே தயவுசெய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,” என்று இந்த சம்பவம் குறித்து படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் ட்விட்டரில் பதிவிட்டார்.
அதே நேரத்தில் அதா ஷர்மாவும் இந்த விபத்தைப்பற்றி சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார். 'கவலைப்பட ஒன்றுமில்லை. நான் நலமாக இருக்கிறேன்' என்று ட்விட்டரில் எழுதினார்.
"நண்பர்களே, எங்கள் விபத்து பற்றிய செய்தி வைரலான பிறகு, பலரிடமிருந்து எனக்கு செய்திகள் வருகின்றன. எங்கள் குழுவும், நானும் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறோம். பெரிய விபத்து எதுவும் நடக்கவில்லை. அனைவருக்கும் நன்றி," என்று அவர் எழுதினார்.

பட மூலாதாரம், SUJIT JAISWAL
அதா ஷர்மாவுக்கு மிரட்டல் வருகிறதா?
'தி கேரளா ஸ்டோரி' குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களைக் வெளியிட்டு வருகின்றனர். ஒருபுறம் சிலர் இதை சரி என்று சொன்னாலும், மறுபுறம் இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
தனக்கு பல்வேறு மிரட்டல்கள் வருவதாக படத்தின் தயாரிப்பாளர் பலமுறை கூறியுள்ளார்.
ஆனால் அதா ஷர்மாவுக்கும் கொலை மிரட்டல் வந்ததா?
அதா ஷர்மா சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது இந்த கேள்விக்கு பதிலளித்தார்.
எப்படி மக்களின் அன்பு கிடைக்கிறதோ அதேபோல மக்களிடம் இருந்து எங்களுக்கு மிரட்டலும் வருகிறது என்றார்.

பட மூலாதாரம், TWITTER/ADAH SHARMA
" திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலமுறை இதை எதிர்கொண்டுள்ளனர். கொலை மிரட்டல்கள் அச்சம் தருவதாகும். உலகம் முழுவதிலும் இருந்து எனக்கு அன்பு வருகிறது. மக்களின் அன்பைப் பார்க்கும்போது என்னைச் சுற்றி ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்,”என்று அதா ஷர்மா கூறினார்.
'தி கேரளா ஸ்டோரி' மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அதா ஷர்மாவைத் தவிர, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலானி ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் காணப்படுகின்றனர்.
படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா மற்றும் இயக்குனர் சுதிப்தோ சென்.
படம் குறித்து எழுந்த கேள்விக்கு அதாவின் பதில்
மே 17 ஆம் தேதி படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா, இயக்குனர் சுதிப்தோ சென் மற்றும் படத்தின் நான்கு நடிகைகளான அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலானி ஆகியோர் மும்பையில் இருந்தனர்.
இவர்களைத் தவிர, கேரளாவைச் சேர்ந்த 26 சிறுமிகளும் இங்கு வந்திருந்தனர். அவர்கள் 'மதம் மாற்றப்பட்டதாக' கூறப்படுகிறது.

பட மூலாதாரம், FUTURE PUBLISHING
நடிகை அதா ஷர்மா, ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்கின்ற ஃபாத்திமா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகை அதா ஷர்மா சிறுமிகளின் அவலநிலையை விவரித்து, "என் இயக்குனர் சுதிப்தோ சென் எனக்கு ஒரு வீடியோவை காட்டினார். அதில் வாஷிங் மிஷினில் துணிகளை அடைப்பதுபோல பெண்களும் குழந்தைகளும் டேங்கர்களில் ஏற்றப்படுகின்றனர்,” என்றார்.
”இந்த நிலையில் அவர்கள் 16 மணி நேரம் இந்த டேங்கரில் பயணம் செய்கின்றனர். மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுகிறது. அவர்களை வெளியே கொண்டுவரும்போது பாதி இறந்த நிலையில் உள்ளனர். நீங்கள் ரெகார்ட் பற்றி பேசுகிறீர்களின். ஆனால் இவர்களின் ரெக்கார்ட் இருக்காது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மேலும் பயங்கரவாதிகளாக ஆக்கப்படக்கூடிய குழந்தைகளையும், பாலியல் அடிமைகளாக ஆக்கப்படக்கூடிய பெண்களையும் வைத்துக்கொள்கிகிறார்கள். அவர்களுக்கு வேண்டாதவர்கள் பாலைவனத்தில் விடப்படுகிறார்கள்."
அவர் இந்தக் கதையைச் சொல்ல முயற்சித்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன் என்று அதா ஷர்மா தெரிவித்தார்.
இந்தப்படத்தில், மூன்று சிறுமிகளின் கதை காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலில் மூளை சலவை செய்யப்படுகிறது. பின்னர் மதம் மாற்றப்படுகிறது.
இதன் பிறகு சிறுமிகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
32,000 சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படத்தின் டிரைலரில் கூறப்பட்டது.
ஆனால், பின்னர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் 32 ஆயிரம் பெண் குழந்தைகள் என்ற எண்ணிக்கையை நீக்கிவிட்டு ‘மூன்று சிறுமிகளின் உண்மைக் கதை’ என்று மாற்றியுள்ளனர்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
பாக்ஸ் ஆபிஸ் வருவாய்
'தி கேரளா ஸ்டோரி' முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
பிரபல வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் படத்தின் 11வது நாள் வசூல் புள்ளிவிவரங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மொத்த வசூல் இதுவரை 147.04 கோடி ரூபாய் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












