கத்தார் கால்பந்து உலக கோப்பை தொடர்: அரேபியர்கள், முஸ்லிம்கள் பெற்ற பலன் என்ன?

கத்தார்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி இந்திக்காக

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி அர்ஜென்டினாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. அர்ஜென்டினா மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது. இதில் லியோனெல் மெஸ்ஸி மிகப்பெரிய பங்கை வகித்தார். அர்ஜென்டினா இதற்கு முன்பு 1978 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் FIFA உலகக் கோப்பையை வென்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பைத் தொடர் நடந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு முஸ்லிம் நாட்டில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வுக்கு அரபு மற்றும் இஸ்லாமியத் தொடர்பைக் கொடுக்க கத்தார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.

ஃபிஃபா போட்டியை நடத்துவதற்காக கத்தார் 220 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனெல் மெஸ்ஸி உலக கோப்பையை பெற சென்றபோது, கத்தார் ஆட்சியாளர் ஷேக் தாமின் பின் ஹமாத் அல்தானி அவரது தோளில் ஒரு கருப்பு அங்கியை அணிவித்தார். இது அரபு ஆண்களின் பாரம்பரிய உடை. மெஸ்ஸியின் சட்டை இந்த உடையால் மூடப்பட்டிருந்தது. அவரது தேசிய பேட்ஜ் கூட மறைக்கப்பட்டிருந்தது. இதன் போது, ஃபிஃபா தலைவர் சிரித்தபடி காணப்பட்டார்.

பாரம்பரிய முறையிலான இந்த மரியாதையை அரேபியர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் மேற்கத்திய ட்விட்டர் பயனர்கள் அதை விமர்சித்து வருகின்றனர்.

அர்ஜென்டீனா

பட மூலாதாரம், Getty Images

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் பாப்லோ ஃஜாப்லேட்டா, "ஏன் இந்த அங்கி, அதற்கான தேவை இருக்கவில்லை,”என்று குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் ஃபிஃபா உலக கோப்பை போட்டியின் துவக்க விழாவில் ஒரு பாடகி பாரம்பரிய புர்கா அணிந்திருந்தார். பல ஐரோப்பிய நாடுகளில் இந்த வகையாக முகத்தை மூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தொடர்பு

இது தவிர குர்ஆன் வசனமும் படிக்கப்பட்டது. கத்தாரில் உள்ள சில ஹோட்டல்களில் பார்வையாளர்களுக்கு இஸ்லாம் பற்றிய புரிதலை அதிகரிக்க QR குறியீடுகள் வழங்கப்பட்டன என்று சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது தவிர இஸ்லாமிய தன்னார்வலர்கள் இஸ்லாமிய நாகரிகத்தைப் பற்றி பார்வையாளர்களுக்கு எடுத்துரைப்பதை பார்க்க முடிந்தது.

அமெரிக்க கேபிள் செய்தி சேனல் சி.என்.என், கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை நிகழ்வு மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்புகளை மேற்பார்வையிடும் FIFA உயர் குழுவிடம் இஸ்லாமிய 'டச்' வழங்குவது குறித்து கேள்விகள் கேட்டது. ஆனால் பதில் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த கேள்விக்கு கேட்கப்படுவதற்கு முன்பாக கத்தாரின் சுப்ரீம் கமிட்டி, சி.என்.என்-க்கு ஓர் அறிக்கையை வழங்கியது.

"உள்ளடக்கிய மற்றும் பாகுபாடு இல்லாத உலக கோப்பை போட்டியை நடத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கத்தாரில் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு பழமைவாத நாடாக இருப்பதால் இங்கு பொதுவில் காதல் தொடர்பான செயல்களைச் செய்ய முடியாது. எங்கள் கலாசாரத்தை மதிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஃபிஃபா உலக கோப்பை செய்திகளை சேகரிக்க கத்தாருக்கு வந்த மேற்கத்திய ஊடகவியலாளர்கள், அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்து தவறான எண்ணத்தை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. கத்தார் மக்கள் மேற்கத்திய உடையில் பெண்களைப் பார்க்கும் பழக்கமில்லாதவர்கள் என்று டைம்ஸ் ஆஃப் லண்டன் ஒரு புகைப்படத்தின் தலைப்பில் எழுதியது. சமூக ஊடகங்களில் இது குறித்து சர்ச்சை எழுந்ததால், இந்த தலைப்பை நீக்க வேண்டியிருந்தது. கத்தாரின் 29 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 87 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர் மற்றும் இவர்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். கத்தாரில் நடத்தப்பட்ட FIFA உலகக் கோப்பை குறித்த மேற்கத்திய ஊடகங்களில் வரும் விமர்சனங்களை நிராகரித்த FIFA தலைவர் ஜியானி இன்ஃபைடினோ, கத்தாருக்கு அனுதாபம் தெரிவித்தார்.

வெற்றிக் கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அர்ஜென்டினாவில் வெற்றிக் கொண்டாட்டம்

ஃபிஃபா தலைவர் என்ன சொன்னார்?

கத்தாரில் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு ஃபிஃபா தலைவர்,“இன்று நான் கத்தாரைச் சேர்ந்தவன் போல உணர்கிறேன். இன்று நான் என்னை ஓர் அரேபியனாகக் காண்கிறேன். இன்று நான் என்னை ஓர் ஆப்பிரிக்கனாக பார்க்கிறேன். இன்று நான் ஒரு மாற்றுத்திறனாளியாக உணர்கிறேன். இன்று நான் என்னை புலம்பெயர்ந்த தொழிலாளியாக பார்க்கிறேன். மேற்குலகம் தனது பாசாங்குகளால் சூழப்பட்டு மற்றவர்களுக்கு ஒழுக்கம் பற்றிய செய்திகளை வழங்கி வருகிறது,” என்றார். உலக கோப்பையின் போது, வெளியில் இருந்து வரும் கால்பந்து பிரியர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி கூற கத்தார் ஆர்வமாக இருந்தது என்று ஏபி செய்தி முகமை தெரிவித்தது. உலகக் கோப்பை விருந்தினர்களுக்காக இஸ்லாமிய விவகார அமைச்சகம், கட்டாரா கலாசார கிராம மசூதியில் முழு பெவிலியனை அமைத்திருந்தது. இந்த பெவிலியனில் இஸ்லாமிய சின்னங்கள் 30 மொழிகளில் இருந்தன. இது தவிர விருந்தினர்களுக்கு சிறு புத்தகங்கள் மற்றும் குர்ஆன்களும் விநியோகிக்கப்பட்டன. உலக கோப்பை மைதானங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் க்யூஆர் குறியீடுகள் இருந்தன. அவற்றை ஸ்கேன் செய்தால் குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றி படிக்க முடியும். கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கட்டாரா கலாசார கிராம மசூதி அனைவரையும், குறிப்பாக இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களை ஈர்க்கும் மையமாக இருந்தது என்று துருக்கிய செய்தி நிறுவனம் அனாதோலு எழுதியுள்ளது.

இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மைமிக்க மதம் என்று பல மொழிகள் தெரிந்த ஆண்களும் பெண்களும் சுற்றுலாப் பயணிகளிடம் விளக்கியதாக அனாதோலு மேலும் தெரிவித்தது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

இஸ்ரேல் பற்றிய சர்ச்சை

2022 உலகக் கோப்பையின் போது இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து தோஹாவுக்கு நேரடி விமானங்கள் இருக்கும் என்று ஃபிஃபா சென்ற மாதம் அறிவித்தது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ரசிகர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. கத்தாருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதாண்மை உறவுகள் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவை இருந்ததில்லை. இந்த உலகக் கோப்பையின் போது தோஹா மற்றும் டெல் அவிவ் இடையே விமான சேவை தொடங்குவதைப் பற்றி இஸ்ரேல் மிகவும் உற்சாகமாக இருந்தது. இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று கூறியது. அரபு உலகம் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளும் திசையில் நகரும் செயலாக பலர் இதைப்பார்த்தனர். ஆனால் அரேபிய கால்பந்து பிரியர்கள் இஸ்ரேலின் இந்த உற்சாகத்தை நீண்ட காலம் நிலைத்திருக்க விடவில்லை. இந்தப் போட்டியின் செய்திகளை சேகரிக்க வந்த இஸ்ரேலிய ஊடகங்களை, அரபு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் புறக்கணிக்கத் தொடங்கினர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

பாலத்தீனத்திற்கு ஆதரவு

மறுபுறம் கத்தாரில் பொது இடங்களில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மைதானத்திற்கு வெளியே இஸ்ரேலிய ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாலத்தீன ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பாலத்தீன அதிகார சபையின் கொடிகளும் அசைக்கப்பட்டன.

இராக் மற்றும் அரபு நாடுகள் பற்றிய செய்தி வழங்கும் அம்வாஸ் மீடியா, "ஃபிஃபா உலக கோப்பையில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக காட்டப்படும் உணர்வு பார்வையாளர்களை வியக்க வைக்கிறது. இது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஆச்சரியமாக இருந்தது,”என்று எழுதியது.

”அரபு- இஸ்ரேல் தாவாவுக்கு தீர்வுகாணும் நோக்கிலான ஆபிரகாம் உடன்படிக்கைகளின் வரம்புகளை புரிந்து கொள்ள பலர் தவறி விட்டனர். அரபு நாடுகளில் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் FIFA உலகக் கோப்பையின்போது அரபு நாடுகளின் சாமானியர்கள் மத்தியில் இதற்கு முற்றிலும் மாறான சூழல் நிலவியது,”என்று அது குறிப்பிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியுடன், பஹ்ரைன், மொராக்கோ, சூடான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் முறையான உறவுகளை ஏற்படுத்த இஸ்ரேல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த நான்கு நாடுகளும் இஸ்ரேலுடன் அரசு மட்டத்தில் முறையான உறவை ஏற்படுத்திக் கொண்டபோதிலும், அங்குள்ள பொதுமக்களின் எதிர்வினை வேறுவிதமாக இருப்பதாக அம்வாஸ் மீடியா எழுதியுள்ளது. மற்ற அரபு நாடுகளிலும் இஸ்ரேல் மீதான வெறுப்பு குறையவில்லை.

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

அரபு மக்களின் கோபம்

"இஸ்ரேல் அரபு அரசுகளுடன் சமாதானம் செய்து கொள்கிறது. அது வேறு விஷயம். ஆனால் அரபு நாட்டு மக்கள் மத்தியில் இஸ்ரேல் குறித்த கருத்து என்ன என்பது வேறு விஷயம். இஸ்ரேலுடனான உறவை சீராக்கிய அரபு நாடுகளின் சாமானிய மக்கள் இதை ஏற்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது,” என்று அம்வாஸ் மீடியா குறிப்பிட்டது. " அரபு அரசுகளுக்கும் அங்குள்ள பொது மக்களும் இடையே இஸ்ரேல் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்பதை அரபு மக்கள் மற்றும் உலகக் கோப்பை வீரர்களிடையே காணப்பட்ட பாலத்தீனர்கள் மீதான அனுதாபம் சுட்டிக்காட்டுகிறது,” என்று அன்வாஸ் மீடியாவிடம் பேசிய டென்வர் பல்கலைக் கழகத்தின் மத்திய கிழக்கு ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் நாதேர் ஹாஷ்மி தெரிவித்தார். ”ஆபிரகாம் உடன்படிக்கைகள் சாமானிய மக்கள் மத்தியில் மிகவும் விரும்பத்தகாததாகி வருகிறது. அரபு நாடுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து ஜனநாயகம் வரும்போது, ஆபிரகாம் உடன்படிக்கைகள் மேலும் வலுவிழக்கும். அரேபிய பொது மக்கள் பாலத்தீனர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.”

அரபு மக்களின் கோபம்

பட மூலாதாரம், @ARABNEWS

கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, இஸ்ரேலுடனான உறவை சீர்படுத்தும் விஷயம் தொடர்பாக அரேபிய ரசிகர்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று மத்திய கிழக்கு ஊடகங்களில் கூறப்படுகிறது. இஸ்ரேலியர்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உலக கோப்பை போட்டி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இப்படிச் செய்தால் உலக ஊடகங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை உலகம் முழுக்கச் சொல்ல முடியும் என்பதும் அரபு நாட்டுப் பொது மக்களின் மனதில் இருந்தது. இஸ்ரேலிய ஊடகங்களுக்கு சாமானிய அரபு மக்கள் அளித்த பதில் வைரலாகி வருகிறது என்று அரபு நியூஸ் எழுதியுள்ளது. நவம்பர் 18ஆம் தேதி ஒரு வீடியோ வைரலானது. அதில் கத்தாரைச் சேர்ந்த ஒருவர் இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனலின் செய்தியாளரிடம் பேச மறுத்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப்பிறகு மற்றொரு வீடியோ பற்றியும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதில் லெபனான் மக்கள் இஸ்ரேலிய பத்திரிகையாளர்களுடன் பேச மறுத்தனர். "இஸ்ரேலுக்கு இங்கு இடமில்லை. முழுதும் பாலத்தீனம் தான்,” என்று சேனல் 12 செய்தியாளரிடம் ஒருவர் கூறினார்.

கத்தார்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலியர்கள் மீது வெறுப்பா?

கத்தாரில் அரபு ரசிகர்களின் இஸ்ரேல் புறக்கணிப்பு, செய்திகளில் பெரிதாக அடிபடுகிறது. இதற்கு இஸ்ரேலிய பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்ரேலிய பத்திரிகையாளர் ராஸ் ஷெச்சிங்க் நவம்பர் 26 அன்று ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அரபு மக்கள் பாலத்தீன கொடியை ஏந்தி இஸ்ரேல் பத்திரிகையாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். இஸ்ரேல் எங்கும் இல்லை, முழுப் பகுதியும் பாலத்தீனம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தையும் இந்தக்காணொளியில் பார்க்க முடிகிறது. இந்தக் காணொளியில் ஓர் இளைஞர் செய்தியாளரிடம் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்கிறார்.

இஸ்ரேலில் இருந்து என்று செய்தியாளர் கூறினார். இதைக் கேட்டதும் அந்த இளைஞர் பாலத்தீன கொடியுடன் முன்னால் சென்று நான் இஸ்ரேலை ஒரு நாடாகக் கருதவில்லை, பாலத்தீனம் மட்டுமே உள்ளது என்று கூறுகிறார். இதற்கிடையில் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் வருகிறார்கள், அவர்களும் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பின்னர் மொராக்கோ ரசிகர்கள் வருகிறார்கள். அவர்களும் இஸ்ரேலிய செய்தியாளரிடம் பேச மறுக்கிறார்கள். மொராக்கோ ரசிகரிடம் உங்கள் நாடு இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று இஸ்ரேலிய செய்தியாளர் சொல்கிறார். அதற்கு மொராக்கோ ரசிகர்கள் ’இஸ்ரேல் எதுவும் இல்லை. பாலஸ்தீனம் மட்டுமே உள்ளது.’ என்று சொல்கிறார்கள். இதன் போது இஸ்ரேலிய செய்தியாளர் ஓர் இஸ்ரேலிய குடிமகனிடம் பேசுகிறார். அப்போது மக்கள் பின்னால் வந்து பாலத்தீன கோஷங்களை எழுப்பத் தொடங்குகிறார்கள்,” இஸ்ரேல் இல்லை. பாலத்தீனம் மட்டுமே உள்ளது,” என்று அவர்கள் கோஷமிடுகின்றனர். இஸ்ரேலிய செய்தியாளர் ராஸ் ஷெச்சிங்க் இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, "நான் எதையும் எழுத விரும்பவில்லை. நீங்களே கேளுங்கள். நாங்கள் எப்போதும் செய்தியாளராக இருக்கிறோம். இது ஒரு விளையாட்டு நிகழ்வு. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதை என்னால் பகிர முடியாது. இங்கு எங்கள் மீது நிறைய வெறுப்பு உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலக கோப்பையில் மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறியது, அரபு மற்றும் இஸ்லாத்தின் பெருமையுடன் இணைக்கப்பட்டது.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு OIC மொராக்கோவை வாழ்த்துவதற்காக ஒரு தனி அறிக்கையை வெளியிட்டது, அதே நேரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், மொராக்கோ அணியை முஸ்லிம் அணி என்று அழைத்தார். செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் மொராக்கோ மன்னரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்

போட்டியின் சிறப்பம்சங்கள்

இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா 2022 கால்பந்து உலக கோப்பையை வென்றது. அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளிலும் அர்ஜென்டினா அணி சாம்பியன் ஆனது. இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயமானது. 4-2 கோல் கணக்கு அர்ஜென்டினாவுக்கு சாதகமாக அமைந்தது. இரு அணிகளும் இரண்டாவது பாதிக்குப்பிறகு 2-2 மற்றும் கூடுதல் நேரத்திற்குப் பிறகு 3-3 கோல்கள் என சமநிலையில் இருந்தன. அர்ஜென்டினா அணிக்காக லியோனெல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் மாரியா ஒரு கோலையும் அடித்தனர். பிரான்ஸ் அணிக்காக கிலியன் எம்பாப்பே மூன்று கோல்களையும் அடித்தார். போட்டியில் எட்டு கோல்கள் அடித்த எம்பாப்பே, 'கோல்டன் பூட்' விருது பெற்றார். ஏழு கோல்கள் அடித்த லியோனெல் மெஸ்ஸி போட்டியின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: