கோலி vs கங்குலி: ஓராண்டுக்கு மேலாகியும் தீராத பனிப்போர் - பெங்களூரு, டெல்லி ஆட்டத்தில் நடந்தது என்ன?

கோலி vs கங்குலி பனிப்போர்

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட்டை உலக அரங்கில் உயர்த்திய இரு பெரும் நட்சத்திரங்களான கங்குலியும் கோலியும் எதிரெதிர் துருவங்களாக வலம் வருவது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் தொடங்கிய வெட்ட வெளிச்சமான அந்த மோதல், ஓராண்டாகியும் கூட தீரவில்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது கங்குலி - கோலி இடையே என்ன நடந்தது? அதற்கு இருவரும் ஆற்றிய எதிர்வினை என்ன? ஓராண்டுக்கு மேலாகியும் இருவருக்கும் இடையே உள்ளுக்குள் பகை புகைந்து கொண்டே இருப்பதற்கான காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் கங்குலி

இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் கேப்டனானதும், அதுகாறும் இருந்து வந்த மென்மையான அணுகுமுறைக்கு குட்பை சொல்லிவிட்டு அணியில் ஆக்ரோஷமான அணுகுமுறையை புகுத்தியவர் அவர். அத்துடன் சேவாக், யுவராஜ், தோனி என பல திறமையாளர்களைக் கண்டுபிடித்து அணிக்குள் கொண்டு வந்து வெளிநாட்டு மண்ணிலும் இந்தியாவால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் கங்குலி.

மறுபுறம் கோலியோ, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு இருபது ஓவர், ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் ரன் குவிக்கும் இயந்திரமாக திகழ்பவர். 2014-ம் ஆண்டு தோனிக்குப் பிறகு அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவர், 2021-ம் ஆண்டு நவம்பர் வரையிலும் சுமார் 9 ஆண்டுகள் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை அவரே தலைமை தாங்கி வழிநடத்தினார்.

கோலி vs கங்குலி பனிப்போர்

பட மூலாதாரம், Getty Images

பனிப்போர் தொடங்கியது எப்போது?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து கோலி விலகிய விதம் தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், குறிப்பாக அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கும் அவருக்கும் இருந்த மோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

2021-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகினார். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்து ரோகித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த நேரம் அது.

2013ம் ஆண்டு முதலே கோலி தலைமையில் விளையாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியோ அதுவரையிலும் (இப்போதும் கூட) ஒரு கோப்பையை கூட வென்றிருக்கவில்லை. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கோலி தலைமையில் இருதரப்பு போட்டிகள், தொடர்களை கேப்டன் கோலி வென்று தந்த போதிலும், ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் அவர் தலைமையில் கோப்பை ஏதும் வரவில்லை. அதுவே அவருக்கு நெருக்கடியாக அமைந்துவிட்டது.

கோலி vs கங்குலி பனிப்போர்

பட மூலாதாரம், Getty Images

இந்திய டி20 அணி கேப்டன் பதவியை துறந்தார் கோலி

ஒருபுறம் முந்தைய கேப்டன் தோனி அனைத்து விதமான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்றிருக்க, மறுபுறம் அவரது சம கால வீரரான ரோகித் ஐ.பி.எல்.லில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வர கோலி மீது விமர்சனங்கள் எழுந்தன. ராசியில்லாத கேப்டன் என்றும் முத்திரை குத்தப்பட்ட கோலி, 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தனது உச்சக்கட்ட பார்மில் இருந்தும் கீழிறங்கிவிட்டார். 2 ஆண்டுகளாக அவரது பேட்டில் இருந்து சதம் வராமல் இருந்தது கண்டு ரசிகர்கள் கவலையடைந்தனர்.

அழுத்தங்களைக் குறைத்துக் கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த வசதியாக இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 2021-ம் ஆண்டு நவம்பரில் விராட் கோலி அறிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

ஒருநாள் அணி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கம் - ரசிகர்கள் அதிருப்தி

கோலி விலகியதும், அந்த பொறுப்பில் அமர வைக்கப்பட்ட ரோகித் சர்மா, அடுத்த மாதத்திலேயே ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்திய அணியைத் திறம்பட வழிநடத்தி வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த கோலிக்கு முறையாக வழியனுப்பு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ கூட நடத்தப்படவில்லை, கங்குலி இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை என்று பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

கங்குலி - கோலி இடையே பனிப்போர் நிலவியது அம்பலம்

கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து பிடிஐ முகமையிடம் பேசிய செளரவ் கங்குலி, "டி20யின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் கூறினோம், ஆனால் அவர் டி20-ன் தலைவராகத் தொடர விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் விராட் கோலி அளித்த பேட்டிதான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் அவருக்கும் இருந்து வந்த பனிப்போரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

"ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்குவது குறித்து யாரும் என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியை முடிவு செய்வதற்கான கூட்டத்திற்கு கடைசி நேரத்தில்தான் அழைக்கப்பட்டேன். கூட்டத்தின் முடிவில் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை விடுவிப்பதாகக் தேர்வுக்குழு கூறியது." என்று கோலி அளித்த பேட்டி, அதற்கு முன்பு கங்குலி அளித்த விளக்கத்துடன் முரண்பட்டது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

3 வகையான கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக கோலி

அடுத்த மாதமே டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகிவிட்டார். அதற்கு முன்பே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டதால், இந்திய அணிக்கோ, கிளப் அணிக்கோ எந்த வகையான கிரிக்கெட்டிலும் அவர் கேப்டன் பதவியை வகிக்கவில்லை. அதன் பிறகு, அணியில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய நட்சத்திரமாகவே கோலி திகழ்ந்து வருகிறார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பார்மை மீட்ட பிறகு விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை அடித்து அசத்தி வருகிறார். நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இதற்குள்ளாகவே 3 அரைசதங்களை விளாசி ரசிகர்களுக்கு அவர் விருந்து படைத்துள்ளார்.

கங்குலி - கோலி வீடியோ வைரல்

அவ்வாறு அவர் அடித்த அரைசதங்களில் ஒன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக வந்தது. நடப்பு தொடரில் முதல் ஆட்டநாயகன் விருதை அந்த போட்டியில் கோலி வென்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நட்சத்திர வீரராக கோலி திகழ, எதிர்த்து ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கோ இயக்குநர் சவுரவ் கங்குலிதான்.

கடந்த 15-ம் தேதி நடந்த அந்த போட்டியின் போது ஒருவரை ஒருவர் பார்க்க நேரிட்ட தவிர்க்க இயலாத தருணங்களில் இருவரும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதே அவர்களுக்கு இடையிலான பனிப்போர் இன்னும் தொடர்வதை உறுதிப்படுத்தியது.

அந்தப் போட்டியில், இரண்டாவதாக பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 18-வது ஓவரில் அமன் ஹகிம் கான் அடித்த பந்தை லாங் ஆன் திசையில் எல்லைக்கோடு அருகே நின்றிருந்த கோலி அபாரமாக கேட்ச் செய்தார். பின்னர் தனது பீல்டிங் பகுதிக்கு திரும்பி வந்த கோலி, அங்கே எல்லைக்கோட்டிற்கு வெளியே டெல்லி அணியின் டக்அவுட் பகுதியில் அமர்ந்திருந்த சவுரவ் கங்குலியை வெறித்துப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

இன்ஸ்டாவில் பரஸ்பரம் அன்ஃபாலோ செய்த கோலி - கங்குலி

அதே ஆட்டத்தின் முடிவில், இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தினர் கைகுலுக்கிக் கொள்ளும் போது, விராட் கோலியை சவுரவ் கங்குலி வேண்டுமென்றே தவிர்க்கும் வீடியோவும் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.

அந்த இரு வீடியோக்களும் கங்குலி - கோலி இடையிலான பனிப்போர் இன்னும் ஓயவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இருந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் சவுரவ் கங்குலியை பின்தொடர்வதில் இருந்து கோலி பின்வாங்கிவிட்டார். அதாவது, கங்குலியை அவர் அன்ஃபாலோ(unfollow) செய்துவிட்டார்.

இது செய்தி உலகில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேபிட்டல்ஸ் இடையிலான போட்டியின் போது கங்குலி - கோலி நடந்து கொண்ட விதம் குறித்து மூன்றாவதாகவும் ஒரு வீடியோ வெளியானது. அதில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்க வீரராக களமிறங்க தயாராக இருக்கும் கோலி, அருகில் இருந்த கங்குலியை நோக்க, கங்குலியோ அவரது பார்வையைப் புறக்கணித்தபடி இருக்கிறார்.

கங்குலி - கோலி தொடர்பான இந்த 3 வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக, இன்ஸ்டாகிராம் தளத்தில் கங்குலியை கோலி அன்ஃபாலோ செய்ததும் பரபரப்பான விவாதப் பொருளாக மாறிவிட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, கோலிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வதை கங்குலியும் ரத்து செய்துள்ளார்.

கோலி vs கங்குலி பனிப்போர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கொடுத்த கேப்டன் என்று பெயரெடுத்த கங்குலிக்கும், ஆக்ரோஷமான வீரர் என்று பெயரெடுத்த கோலியும் ஓராண்டுக்கும் மேலாக பனிப்போரை தொடர்வது கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: