கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி - அடுத்த முதல்வர் யார்? தேர்தல் முடிவுகள் - முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பா.ஜ.க.வுக்கு சற்று சாதகமாக இருந்த நிலை, அடுத்த அரை மணி நேரத்திலேயே முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போதைய நிலையில், அங்கு காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்கும் சற்று கூடுதலாக தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.
நாடு முழுவதும் காங்கிரஸ் முகாமில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அதேநேரத்தில், யாரை முதலமைச்சராக்குவது என்ற கேள்வியும் காங்கிரசில் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவா? அல்லது கர்நாடகாவில் பல்வேறு சோதனைகளையும் தாண்டி காங்கிரசை காத்து நின்ற டி.கே.சிவகுமாரா? என்று இப்போதே அக்கட்சியினரிடையே விவாதங்கள் தொடங்கிவிட்டன. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.
10 முக்கிய அம்சங்கள்
- பெங்களூரு மட்டுமின்றி டெல்லியில் உள்ள காங்கிரஸின் தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்கட்சித் தலைமை அலுவலகங்களிலும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. காங்கிரஸின் பல தலைவர்களும் ராகுல்காந்தி மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை நடைபயணம்' நல்ல பலனைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளனர். அதே கருத்தை பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
- கர்நாடகாவில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பெங்களூரு வருமாறு அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒரே இடத்தில் தங்க வைத்து, பாதுகாக்க காங்கிரஸ் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் பட்சத்தில், முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கா? டி.கே.சிவகுமாருக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. "பா.ஜ.க.வை ஆட்சியமைக்க விடாமல் செய்ய எதையும் செய்வோம். கர்நாடகாவின் நலனுக்காக எனது தந்தை முதலமைச்சராக்கப்பட வேண்டும்" என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
- முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகிய இருவருமே தத்தமது தொகுதிகளில் முன்னணியில் இருக்கின்றனர். வருணா தொகுதியில் சித்தராமையா தமக்கு அடுத்த இடத்தில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் சோமன்னாவைக் காட்டிலும் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
- கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்யும் அளவுக்கு அமோக வாக்குகளைப் பெற்றுள்ளார். சற்று முன்வரை, அவர் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் நிலையில், அடுத்தடுத்துள்ள மத சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க., ஆகியவற்றின் வேட்பாளர்கள் 9 ஆயிரம் வாக்குகளைக் கூட தாண்டவில்லை.
- கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவரது ஷிக்கோவான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பதான் யாசிர் அஹமத்கானை விட சுமார் 22 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
- அதிமுக நிறுத்திய வேட்பாளரை திரும்பப் பெற்றுக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரித்த புலிகேசி நகர் தொகுதியில், பா.ஜ.க. டெபாசிட் இழக்கும் நிலையில் இருக்கிறது. சற்று முன் நிலவரப்படி, அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சி.ஸ்ரீநிவாசா 47,351 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். பகுஜன் சமாஜ் வேட்பாளர் அகண்டா ஸ்ரீநிவாசமூர்த்தி 13,884 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், பா.ஜ.க. வேட்பாளர் முரளி 5,855 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மத சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் அனுராதாவுக்கு 510 வாக்குகளே கிடைத்துள்ளன.
- தென்னிந்தியாவின் அயோத்தி என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய கோவில் கட்டப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்த ராமதேவரப்பேட்டா கோவிலை உள்ளடக்கிய ராம நகரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளார். அந்தத் தொகுதியில் இஸ்லாமியரும் காங்கிரஸ் வேட்பாளருமான இக்பால் ஹுசைன் 65,192 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் குமாரசாமியின் மகன் நிகில் இருக்கிறார். பா.ஜ.க. சுமார் ஒன்பதாயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. "ராமதேவரப்பேட்டா கோவிலை காங்கிரஸ் கவனிக்கவில்லை; அதனால் அந்தக் கோவிலே நாசமாகிவிட்டது; பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் அங்கு அயோத்தியைப் போல மிகப் பெரிய ராமர் கோவில் கட்டப்படும்" என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது.
- முன்னாள் முதலமைச்சரும், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி தான் போட்டியிட்ட சென்னப்பட்டினம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சற்று முன் நிலவரப்படி, இரண்டாவது இடத்தில் உள்ள பாரதிய ஜனதா வேட்பாளர் சி.பி.யோகேஷ்ராவைக் காட்டிலும் அவர் சுமார் 500 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருக்கிறார்.
- தமிழ்நாடு பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளரும், பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவருமான சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் பின்தங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவைக் காட்டிலும் அவர் சுமார் ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார்.
- சிட்டப்பூர் தொகுதியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் மனிகாந்த ரதோட்டை காட்டிலும் அவர் சுமார் 2,500 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
- முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வில் இருந்து தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேர்ந்த முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டார் தான் போட்டியிட்ட ஹூப்ளி-தார்வார்ட் மத்திய தொகுதியில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். அந்த தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் 27 ஆயிரத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்று, தொடக்கம் முதலே முன்னிலையில் இருக்கிறார். கர்நாடக தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரான ஜெகதீஷ் ஷெட்டாருக்கு பா.ஜ.க.வில் சீட் மறுக்கப்பட்டதால் காங்கிரசில் சேர்ந்தார். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரான எடியூரப்பா, முதலமைச்சர் பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட நிலையில், அதே சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டாரின் விலகலும் பா.ஜ.க.வுக்கு சேதாரத்தை விளைவிக்கும் என்று கருதப்பட்ட நிலையில், அவர் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








