குஜராத்: ஜூனாகத் தர்கா முன்னே இளைஞர்களை தாக்கும் வீடியோ வைரல் - உண்மை என்ன?

பட மூலாதாரம், VIRAL VIDEO
குஜராத் மாநிலம் ஜூனாகட் மாவட்டத்தில் ஒரு தர்காவை அகற்றுவது தொடர்பாக அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஜூனாகட் தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலான வீடியோவில் என்ன உள்ளது?
23 வினாடிகள் நீளமான இந்த வீடியோவில் ஏழு இளைஞர்கள் ஒரு தர்கா முன் நிற்பதை பார்க்க முடிகிறது.
முகத்தை துணியால் மறைத்துக்கொண்டுள்ள இருவர் தர்காவுக்கு முன் வரிசையில் நிற்பவர்களை முதுகின் கீழ் பகுதியில் பெல்டால் கண்மூடித்தனமாக அடிப்பது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த வைரலான வீடியோவை ட்வீட் செய்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, "எங்கள் மீது தான் கொடுமை நடக்கும், ஆனால் எங்களைத்தான் கொடூரமானவர்கள் என்று சொல்வார்கள். எங்களைத்தான் அடிப்பார்கள், ஆனால் எங்கள் மீதுதான் வழக்கும் தொடரப்படும்,” என்று எழுதியுள்ளார்.
“இந்தியாவில் இந்து அடிப்படைவாதம் உச்சத்தில் உள்ளது. மதவெறி பிடித்த இந்துத்துவவாதிகளின் வெறுப்பின் சில தீப்பொறிகள் காவல் துறையை எட்டியுள்ளது. அதன் நேரடி உதாரணம் இன்றைய 2 தலைப்புச்செய்திகளில் உள்ளது.”
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
வைரல் வீடியோவை பகிர்ந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்கடி, அடிப்பவர்களுக்கு குஜராத் காவல்துறையுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
"இப்போது குஜராத் காவல்துறை நீதிமன்றத்தை அணுகுவதில்லை. அது நேரடியாக சாலைகளில் தண்டனை வழங்குகிறது. எல்லோருக்கும் எதிரில் அடித்து, குற்றவாளி என்று அறிவித்துவிடுகிறது. விசாரணையும் இல்லை, எந்த ஆய்வும் இல்லை." என்று இம்ரான் எழுதியுள்ளார்.
"இது ஜூனாகட் வீடியோ. குஜராத் காவல்துறையே, இதுதான் அரசியல் சாசனத்தை பின்பற்றும் முறையா??" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
வீடியோ குறித்து போலீசார் சொல்வது என்ன?

பட மூலாதாரம், HANIF KHOKHAR
வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை அறிய பிபிசி, ஜூனாகட் காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டது.
”சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதே எங்கள் முன்னுரிமை. போலீசார் தற்போது சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை ஓரிரு நாட்களில் ஆராயப்படும்,” என்று ஜூனாகட் எஸ்பி ரவி தேஜா பிபிசியிடம் தெரிவித்தார்.
வன்முறையின்போது ஏற்பட்ட மரணம் குறித்துப்பேசிய எஸ்பி ரவி தேஜா, இந்த சம்பவத்தில் கல் வீச்சு காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 போலீசார் காயமடைந்ததாகவும் கூறினார்.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முழு விவகாரம் என்ன?

பட மூலாதாரம், HANIF KHOKHAR
ஜூனாகட்டின் மஜேவாடி கேட் அருகே சாலையோரத்தில் ஒரு தர்கா உள்ளது.
இதனை அகற்றக்கோரி கடந்த இரு தினங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வெளியிட்டது.
தர்கா சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக அந்த நோட்டீஸ் கூறியது. ஐந்து நாட்களுக்குள் தர்காவை அகற்றுமாறு தர்கா கமிட்டியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தற்போது ஜூனாகட்டில் பல வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே நகரின் ’நரசிங் மேத்தா சரோவர்’ மற்றும் உப்பர்கோட் பகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் இடையூறாக இருக்கும் 'சட்டவிரோத கட்டுமானங்கள்' அகற்றப்படுகின்றன.
இதன்படி மஜேவாடி தர்காவை அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸ் சமூக ஊடகங்களிலும் வைரலானது. வெள்ளிக்கிழமை மாலை தர்கா அருகே கூட்டம் கூடியது.

பட மூலாதாரம், HANIF KHOKHAR
"ஜூன் 14 ஆம் தேதி ஜூனாகட் மாநகராட்சி தர்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன் உரிமைக்கான ஆதாரம் கோரப்பட்டது" என்று இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த ஜூனாகட் எஸ்பி ரவி தேஜா குறிப்பிட்டார்.
”கேபான்ஷா தர்காவை ஐந்து நாட்களுக்குள் அகற்றுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமையன்று தர்காவுக்கு அருகில் ஏராளமானோர் திரண்டனர்.”
கூட்டத்தில் பலர் கோஷங்களை எழுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காவல்துறை அதிகாரிகள் மக்களுக்கு புரிய வைக்க முயன்றதாகவும், சுமார் 45 நிமிடங்கள் வரை பேசுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் எஸ்பி கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு போலீசார் கூட்டத்தினர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








