You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமதாபாத்: விமான விபத்து நடந்த பகுதியின் நிலைமையைக் காட்டும் 12 புகைப்படங்கள்
வியாழக்கிழமை (ஜூன் 12), ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 242 பேர் இருந்தனர்.
பயணிகள் குறித்த தகவல்களை அவர்களின் குடும்பங்கள் தெரிந்துகொள்ள 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர உதவி எண்ணை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானம் ஒரு குடியிருப்புப் பகுதியில் மோதி, தீப்பிடித்து எரிந்தது. மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"இந்தத் துயரச் சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிலான துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது" என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெளிவரும் படங்கள் இந்த விபத்து எவ்வளவு பெரியது என்பதைக் காட்டுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு