You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட முக்கியத் தகவல்கள்
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக ஏர் இந்தியா விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளது.
"ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட AI171 விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு விபத்துக்குள்ளானது என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
இன்று போயிங் 787-8 ரக விமானம் மதியம் 1:38 மணிக்கு லண்டனை நோக்கிப் புறப்பட்டது. பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினர் உள்பட அதில் 242 பேர் இருந்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவை சேர்ந்தவர், 7 பேர் போர்ச்சுகீசியர்கள். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா பயணிகள் தகவல் ஹாட்லைன் ஒன்றை அமைத்துள்ளது. பயணிகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள 1800 5691 444 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். ஏர் இந்தியா விசாரணை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு