யோனியுறை வறட்சியா? இந்த பாதிப்புக்கு என்ன காரணம், மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images
யோனியுறை வறட்சி பிரச்னை 50% முதல் 90% பெண்கள் இந்த குறைபாட்டால் ஒரு கட்டத்தில் பாதிக்கப்படுவார்கள்.
இந்த எண்களில் துல்லியமின்மை ஏன்? ஏனென்றால் இதைப் பற்றி அனைவரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. சில சமயங்களில், பாலியல் செயல்பாடுகளின் போது வலி போன்ற தொந்தரவான அறிகுறிகளை அனுபவித்தாலும் அந்த பெண்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்னை பற்றி பேச மருத்துவரை அணுகுவதில்லை.
"முன்பு, ஒரு சில பெண்களுக்கு இது இருப்பதாக நினைத்தோம். இப்போது இது மிகவும் பொதுவான ஒன்று என்பதையும், மிக அதிக சதவீத பெண்களிடம் இது அறிகுறியாக இருப்பதையும் பார்க்கிறோம். அதாவது, இது நடக்காது, ஆனால் எரிச்சலூட்டும்," என்கிறார் லாரா கேமரா. இவர் மருத்துவச்சி, பாலியல் நிபுணர் மற்றும் பால்வினை, இனப்பெருக்க ஆரோக்கிய நிபுணர்.
யோனியுறை வறட்சி, யோனி அட்ராபி என அழைக்கப்படுகிறது. இது உடல் ரீதியான விளைவுகளைக் கொண்ட ஒரு நோயாகும். ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி உளவியல் ரீதியானது.
ஆனால் உங்களிடம் ஏற்கெனவே அறிகுறிகள் தென்படத் தொடங்கினால் அதைப் போக்க சுவாரஸ்யமான வழி உள்ளது.
ஈஸ்ட்ரோஜன் பிரச்னை
பொதுவாக யோனி அட்ராபி என்று இது அழைக்கப்பட்டாலும், மருத்துவ மொழிப்படி இது மாதவிடாய் நிறுத்தத்தின் மரபணு நோய்க்குறி (GMS) ஆகும். ஏனெனில் இது பிறப்புறுப்பு, சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர்ப்பை ஆகிய இரண்டிலும் ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கியது.
கூடுதலாக, ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் இது அடிக்கடி நிகழ்கிறது.
ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது இது நிகழ்கிறது. இந்த ஹார்மோன்களின் குழு இரு பாலினருக்கும் உள்ளது. இதயம், எலும்பு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும், பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
மேலும், இது ஹார்மோன்கள் மற்றும் சுழற்சியின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கிறது என்பதால், மன அழுத்தம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம்.
"பாலூட்டும் காலத்திலும், கருத்தடை மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போதும், சில வகையான பெண்ணோயியல் புற்றுநோய் அல்லது பிற கட்டிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஈஸ்ட்ரோஜனில் குறைவு ஏற்படலாம்" என்கிறார் லாரா கேமரா.
மிகவும் குறைத்து மதிப்பிடப்படும் அறிகுறி
பாலியல் செயல்பாடுகளின் போது யோனி வறட்சி மற்றும் வலி அடிக்கடி ஏற்படும் அறிகுறிகள் என்று பாலியல் நிபுணர் லாரா கூறுகிறார்.
உண்மையில், யோனி அட்ராபி உள்ள பெண்களில் 90% பேர் மருத்துவ ஆலோசனைக்கு வரும்போதுதான் தங்களுக்கு ஏற்படும் வலியைப் பற்றி பேசுகிறார்கள் என்கிறார் அவர்.
"பிரச்னை என்னவென்றால், உடலுறவின் போது ஏற்படும் வலி மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. பல பெண்கள் வலிமிகுந்த உடலுறவை கொள்கிறார்கள். அடுத்தவரிடம் உதவி கேட்க தயங்குகின்றனர். அவர்களைப் பொருத்தவரை இதை வெளியே பேசுவது தடை செய்யப்பட்ட விஷயமாகும்," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பாலியல் செயல்பாடுகளின் போது போதிய ஈரம் ஏற்படாதது, அரிப்பு, எரிச்சல் அல்லது பிந்தைய இரத்தப்போக்கு மற்றும் சிறுநீர் மண்டலத்தை பாதிக்கும் அறிகுறிகள் முக்கியமானவை. வயிற்றுப்போக்கு, வலி மற்றும் முழுமையடையாமல் சிறுநீரை வெளியேற்றுதல், அத்துடன் முட்டி நிற்கும் சிறுநீர் போன்ற பிற அறிகுறிகள் தோன்றக்கூடும்.
மற்றொரு அறிகுறி பாலியல் ஆசை குறைதல். யோனி அட்ராபி உள்ள பெண்ணிடம் தோன்றக்கூடிய உணர்வுகள் மூலம் இது புரிந்து கொள்ளப்படுகிறது.
"இது விரக்தி மற்றும் எதிர்பார்ப்பு கூடி கவலையுடன் சேர்ந்து ஏற்படுகிறது. பொதுவாக தம்பதியின் தாம்பத்தியத்தில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. பாலுறவில் வலி ஏற்படும் போது, 'இது என்னை காயப்படுத்தப் போகிறது' என்று நினைத்து சந்திப்பின் கவலை செயல்படுத்தப்படுகிறது," என்கிறார் கேமரா.
இது பற்றி வெளிப்படையாக பேசுவது ஒரு தடைசெய்யப்பட்ட விஷயமாக பார்க்கப்படுவதால் இந்த வலியை நிவர்த்தி செய்ய நீண்ட நேரம் எடுக்கும் என்று மீண்டும் வலியுறுத்துகிறார் அவர்.
"சில நேரங்களில் பெண்கள் பல ஆண்டுகளாக வலியை உணர்கிறார்கள் என்றும் கூறி ஆலோசனைக்கு வருகிறார்கள்," என்கிறார் அவர்.
ஆரோக்கிய வாழ்க்கை மற்றும் பிறப்புறுப்பு ரத்த ஓட்டம்
ஈஸ்ட்ரோஜனின் வீழ்ச்சியானது, விரைவில் அல்லது பின்னர், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும். இந்த காரணத்திற்காக, யோனி அட்ராபியின் அறிகுறிகளைப் போக்க உதவும் சில வழிகாட்டுதல்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சரியான எடையை பராமரித்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது உள்ளிட்ட மாதவிடாய் நிறுத்தத்தைத் தடுக்கவும் தவிர்க்கவும் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய ஆண்டுகளில் வாழ்க்கை முறை மாற்றங்களை SEGO முதலில் பரிந்துரைக்கிறது.
மேலும், அதைச் செய்தால், புகைப்பிடிப்பதை நிறுத்துவது முக்கியம்.
ஏனெனில் புகையிலை "ஈஸ்ட்ரோஜன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது" என்கிறது SEGO. அதாவது, "நீங்கள் புகைப்பிடித்தால், யோனி அட்ராஃபி முன்னதாகவே தோன்றுவது மிகவும் சாத்தியம் மற்றும் அதிக அறிகுறிகளாகும்," என்கிறார் கேமரா.
அதைத் தடுக்க நாம் செய்யக்கூடிய வேறு ஒன்று உள்ளது. அது பிறப்புறுப்பின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகும்.
நீங்கள் அதை எப்படி பெறுவீர்கள்?
அது பாலியல் செயல்பாடுகளாலேயே சாத்தியம் என்கிறது எஸ்இஜிஓ.
"அதாவது, சுய-தூண்டுதல், துணையுடன் உடலுறவு, கற்பனைகளின் பயன்பாடு, செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு, பரந்த மற்றும் மிகவும் மாறுபட்ட அர்த்தத்தில் பாலுறவு போன்ற வழிகளை கையாளலாம்", என்று லாரா விவரிக்கிறார்.
இது, பிறப்புறுப்பு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, ஆக்ஸிஜனை வழங்குகிறது. இதனால் அந்த பகுதியின் நெகிழ்ச்சி மற்றும் உயவுத்தன்மையை மேம்படுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு பாலியல் வல்லுநராக, நாம் கொண்டிருக்கும் பாலியல் உறவுகளின் வகையை மறுபரிசீலனை செய்வதும் முக்கியம் என்பது லாரா கேமராவின் வாதம்.
"நன்றாகப் பழகுகிற ஒருவருடன் உறவாடுவது, மற்றவருக்காக அர்ப்பணித்து வாழ்வது, மிகவும் மனநிறைவான பாலுறவைக் கொண்டிருப்பது என்பதை விட தோன்றும் கஷ்டங்கள், வலிகளைப் பற்றி பேசக்கூடியவராக ஒருவர் இருக்க வேண்டும்," என்கிறார் அவர்.
ஆரம்பத்தில் இருந்தே நாம் கூறியது போல், சில பெண்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். அத்தகையோர், முதல் அறிகுறிகள் தோன்றும்போதே சிகிச்சை பெறுகிறார்கள்.
யோனி உயவுத்தன்மை ஏற்பட, பிறப்புறுப்பு பகுதிக்கான குறிப்பிட்ட ஈரப்பதமூட்டும் கிரீம்களை பயன்படுத்தலாம் என்று SEGO அறிவுறுத்துகிறது. லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் தோன்றும் போது இதை உபயோகிக்கலாம்.
"சிறிதளவு வறட்சி தோன்றிய உடனேயே அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கலாம் அல்லது அப்படி உணரத் தொடங்கும் வயதில் நாம் இருந்தால் சருமத்திற்கு சாதாரண ஈரப்பதமூட்டும் கிரீமை கூட பயன்படுத்தலாம்" என்கிறார் லாரா.
மேலும், லேசர் தொழில்நுட்பம், கார்பன் டை ஆக்சைடு பயன்பாடு, ஹைலூரோனிக் அமிலம் மற்றும் ரேடியோ அலைவரிசை சிகிச்சை மூலம் கொலாஜன் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை செயல்படுத்த முயலலாம்.
ஆனால், வுல்வோ-யோனி லேசர் மற்றும் கதிரியக்க அதிர்வெண் ஆகிய இரண்டும், பல்வேறு ஆய்வுகளில் திருப்திகரமான முடிவுகள் இருந்தபோதிலும், அதன் நீண்ட கால செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த தரவுகள் இன்னும் குறைவாகவே உள்ளன என்று SEGO சுட்டிக்காட்டுகிறது. எனவே, அதைப் பரிந்துரைக்கும் முன் கூடுதல் ஆதாரங்கள் தேவை என்கிறார் லாரா.
அதனால்தான் மாற்று முயற்சியாக பாலியல் ஆதரவை உள்ளடக்கிய பலதரப்பட்ட அணுகுமுறையை பரிந்துரைக்கிறார் அவர்.
"மாதவிடாய் நிறுத்த கட்டத்தை அடைந்து அந்த அம்சத்தில் குறைபாடுகளை எதிர்கொள்ளலாம். ஆனாலும் நாம் பாலுணர்வை அனுபவிக்க இன்னும் பல வருடங்கள் உள்ளன. இதை எல்லாம் உணர பாலியல் கல்வி அவசியம். ஆனால், அந்த அடிப்படையான விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது," என்கிறார் லாரா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












