சாய் சுதர்சன்: சி.எஸ்.கே.வுக்கு மரண பயத்தை காட்டிய இந்த தமிழ்நாட்டு வீரர் யார்?

சென்னை வீரர் சாய் சுதர்சன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2023 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே அணி 5வது முறையாக நேற்று வென்றாலும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த 22 வயது சென்னை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் அதிரடி ஆட்டத்தை அந்த அணியினர் யாரும் மறக்கமாட்டார்கள்.

கில், விருதிமான் சாஹா ஆட்டமிழந்தபின் சிஎஸ்கே பக்கம் சென்ற ஆட்டத்தை தனது அதிரடி பேட்டிங்கால் இழுத்துச் சென்ற சாய் சுதர்சனால்தான் குஜராத் அணி 214 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது.

சிஎஸ்கேவை மிரட்டிய சுதர்சன்

அதிலும் தீக்சனா, பதிரனா, தேஷ் பாண்டே ஓவர்களை சுதர்ஷன் வெளுத்து வாங்கினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த சுத்ரசன், அடுத்த 14 பந்துகளில் 46 ரன்கள் என 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 20 பந்துகளில் சுதர்சன் ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக எகிறியது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் பந்துகளில் 8பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை சுதர்சன் வெளுத்து வாங்கினார், ஐபிஎல் பைனலில் சேர்க்கப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோராக மாறியது.

கடந்த சீசனில் 5 இன்னிங்ஸ்களில் 145 ரன்கள் சேர்த்த சுதர்சன், இந்த சீசனில் 8 இன்னிங்ஸ்களில் 362 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரியாக 51 ரன்களும், 141 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். தொடக்க லீக் ஆட்டங்களில் இடம்பெற்றாலும் பின்னர் வாய்ப்பு வழங்கப்படவில்லை, அதன்பின் மீண்டும் அணியில் வழங்கப்பட்ட நிலையில் தன்னுடைய பேட்டிங் நிலைத்தன்மையை சுதர்சன் வெளிப்படுத்திவிட்டார்.

ஐபிஎல்லை விட டிஎன்பிஎல் விலை அதிகம்

ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணி ரூ.20 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சாய் சுதர்சனை வாங்கியது. ஆனால், டிஎன்பில் டி20 தொடரில் லைக்கா கோவை கிங்ஸ் அணி, சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

ரஞ்சிக் கோப்பை சீசனில் தமிழக அணியில் இடம் பெற்ற சுதர்சன் 12 இன்னிங்ஸில் 2 சதங்கள், ஒரு அரைசதம் உள்ளிட்ட 572 ரன்கள் சேர்த்தார். விஜய் ஹசாரே கோப்பையில் 8 இன்னிங்ஸில் 610 ரன்களை சுதர்சன் சேர்த்தார். கெய்க்வாட், ஜெகதீசனுக்கு அடுத்தபடியாக சுதர்சன் இடம் பெற்றார்.

சுதர்சன் மிரட்டல் அடியை நேற்றைய ஆட்டத்தில் பார்த்த ஐபிஎல் ரசிகர்கள் அனைவரும் யார் இந்த பேட்ஸ்மேன், சிஎஸ்கேவை மிரள வைக்கிறாரே என்று யோசிக்க வைத்தனர்.

சென்னை வீரர் சாய் சுதர்சன்

பட மூலாதாரம், Getty Images

சச்சின், அஸ்வின் பாராட்டு

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், சுதர்சன் ஆட்டத்தை புகழ்ந்தார். சச்சின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இன்று இரவு, கண்களுக்கு சாய் விருந்தளித்தார் . அருமையாக விளையாடினீர்கள் சாய்” எனப் பாராட்டினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக லண்டனில் இருக்கும் ரவிச்சந்திர அஸ்வினும், ட்விட்டரில் சுதர்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதில் “ சாய் சுதர்சன் ஆழ்வார்பேட்டே சிசி அணியிலிருந்து ஜாலி ராவர்ஸ் அணிக்குச் சென்று தமிழக கிரிக்கெட் அணிக்கு 3ஆண்டுளுக்கு முன் திரும்பியவர்.

அடுத்து எங்கே. சுதர்சனை ரூ.20 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கிய குஜராத் அணிக்கு வாழ்ததுகள்” எனத் தெரிவித்துள்ளார். இதேபோல முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கும் சாய் சுதர்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

பெற்றோரும் விளையாட்டு வீரர்கள்

தமிழகத்தின் தலைநகரில் பிறந்தபோதிலும்கூட, கிரிக்கெட் பிரபலங்களால் கூட அதிகம் அறியப்படாத இளம் வீரராகவே சாய் சுதர்சன் இருந்துள்ளார். இவரின் குடும்பப் பின்னணி என்ன, பின்புலம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

சென்னையைச் சேர்ந்தவர் சாய் சுதர்சன். இவரின் தந்தை பரத்வாஜ், தாய் உஷா பரத்வாத். முன்னாள் தடகள வீரரான பரத்வாஜ் 1993ம் ஆண்டு தாகாவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார்.

சுதர்சன் தாய் உஷா, தமிழக கைப்பந்து அணியில் இடம் பெற்றிருந்தார். சாய் சுதர்சனின் மூத்த சகோதரர் சாய் ராம், கிரிக்கெட், கால்பந்துப் போட்டிகளில் மாநில அளவில் விளையாடியுள்ளார். ஆக, சாய் சுதர்சனின் பெற்றோரும் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவர்கள் என்பதால் சுதர்சனுக்கு விளையாட்டு மீதான ஆர்வமும் இயல்பாக வந்தது.

உள்நாட்டு லீக் தொடர்கள்

டிஎன்பிஎல் தொடரில் லைக்கா கோவை அணியில் இடம்பெற்ற சாய் சுதர்சன் 2021 சீசனில் 358 ரன்கள் சேர்த்தார், சராசரியாக 70.60 ஆகவும், 143.77 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்திருந்தார். இதற்கு முன், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியில் சுதர்சன் இடம் பெற்றிருந்தார்.

ஆழ்வார்பேட்டை சிசி அணியில் இடம் பெற்றிருந்த சாய் சுதர்சன் 2019-20ம்ஆண்டு நடந்த ராஜா ஆஃப் பாளையம்பட்டி கோப்பைத் தொடரில் 635 ரன்களை சுதர்சன் குவித்தார். 2021ம் ஆண்டு, நவம்பர் 4ம் தேதி, சயத் முஷ்டாக் அலிக் கோப்பையில் தமிழக அணி சார்பில் சாய் சுதர்சன் அறிமுகமாகினார்.

துணிச்சலான பேட்டிங்

ஐபிஎல் தொடர் என்பது உலகளவில் சர்வதேச தரத்திலான பந்துவீச்சாளர்களைச் சந்திக்கும் களமாகும். ஆனால், 21 வயது இளம் வீரரான சாய் சுதர்சன் இந்த சீசனில் சர்வதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை அநாசயமாக எதிர்கொண்டு சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார்.

குறிப்பாக மணி்க்கு 145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் நோக்கியா, காகிசோ ரபாடா ஆகியோரின் பந்துகளில் எளிதாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். அதிலும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த சுதர்சன் ஆட்டத்தைப் பார்த்த ஹர்திக் பாண்டியா வாயடைத்துபோனார்.

பெரிதாக ஏதேனும் செய்வார்

ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ சுதர்சன் பேட்டிங் மிரட்டலாக இருக்கிறது. கடந்த 15 நாட்களாக அவருக்கு பேட்டிங் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு பாராட்டுகள், கடின உழைப்புக்கான பலனைப் பார்க்கிறார்கள், உங்களை முன்னெடுத்துச் செல்லும்.நான் சொல்வதில் தவறில்லை என்றால், அடுத்த 2 ஆண்டுகளில் ஏலத்தில் எடுத்த அணிக்கு, சிறப்பாக ஏதேனும் சுதர்சன் செய்வார். இந்திய அணிக்கும் முக்கியப் பங்களிப்பு செய்வார் என நம்பலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை வீரர் சாய் சுதர்சன்

பட மூலாதாரம், Getty Images

வெற்றிக்கு யார் காரணம்?

சாய் சுதர்சன் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றிருப்பதற்கு அவரின் பெற்றோர் உஷா, பரத்வாஜ் இருவரும் முக்கியக் காரணம். உடற்தகுதி விஷயத்தில் சுதர்சன் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். குறிப்பாக கொரோனா பரவல் காலத்தில் சுதர்சன் உடல் எடை அதிகரித்தது. அதன்பின் சுதர்சனின் தந்தை பரத்வாஜ், தாய் உஷா இருவரும் சேர்ந்து சுதர்சனின் உடல்நலன், உடற்தகுதியை பராமரிப்பதில் கவனம் செலுத்தினர், அவரின் மனதையும் உடற்தகுதி விஷயத்துக்கு மாற்றம் கொண்டு வந்தனர்.

உடற்தகுதி குறித்து பெற்றோர் அளித்த அறிவுரை, ஆலோசனைகள், கவனிப்புகள் மூலம் சுதர்சன் மீண்டும் உடற்தகுதி பெற்றார். போட்டியில் ரன்களை எளிதாக ஓடி எடுக்கவும், பீல்டிங் செய்யவும் சுதர்சனால் எளிதாக முடிந்தது.

தாக்கத்தை ஏற்படுத்திய வாஷிங்டன் சுந்தர்

சென்னை வீரர் சாய் சுதர்சன்

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட்டில் ஆர்வம் ஏற்படுத்தியது குறித்து சாய் சுதர்சன், சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் “ எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தியது என்னுடைய சீனியர் வாஷிங்டன் சுந்தர்தான். எனக்கு 10வயதில் இருக்கும்போதே சுந்தரைத் தெரியும்.

அது சின்னக் கதை. நான் 10 வயதில் இருக்கும் போதிருந்தே தீவிரமாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். இருவரும் பள்ளியில் படிக்கும் போதுதான் கிரிக்கெட் போட்டியின்போதுதான் அறிமுகமாகினோம்.

சுந்தர் செயின் பீட்ஸ் பள்ளிக்காக கிரிக்கெட் விளயைாடுவார், ஆனால், டிஏவி பள்ளிக்காக ஆடுவேன். நான் முதல்முறையாக வாஷிங்டன் சுந்தரைச் சந்தித் போட்டியில் அவர் சதம் அடித்தார். அந்த நேரத்தில் அவருக்கு நான் லெக் ஸ்பின் வீசியிருக்கிறேன்.

அந்தப் போட்டி முடிந்ததும் நான் அழுது கொண்டிருந்தேன். இதைப் பார்த்த சுந்தர் என்னிடம் வந்து என்னை சமாதானப்படுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு சுந்தரை மிகவும் பிடிக்கும். நான் டிஎன்பிஎல் தொடரில் அறிமுகமாகியபோது எனக்காக சமூக வலைத்தளத்தில் நிர்வாகம் செய்த விளம்பரத்தில் நான் சுந்தரைப் போல பேட்டிங் செய்தது தெரிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

சுதர்சனை ஊக்கப்படுத்திய தாய்

அது மட்டுமல்லாமல் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் கடந்த ஆண்டு சத்தீஸ்கர் அணியை தமிழக அணி வென்றது. இந்த ஆட்டத்தில் சாய் சுதர்சன் முதல்முறையாக சதம் அடித்தார். சுதர்சனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவரின் தாய் உஷா, சென்னையில் இருந்து சத்தீஸ்கருக்கு 500 கி.மீ பயணம் செய்து போட்டியை கண்டு ரசித்து உற்சாகப்படுத்தினார், தனது மகன் ஆடிய 3 ஆட்டங்களையும் உஷா கண்டு அவரை ஊக்கப்படுத்தியதில் பெரும் பங்கு வகிக்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: